பட்டாசு வெடிப்பதில் தகராறு.. சிறுவனின் தாயாரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்
பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற தகராறில் ஐந்து வாலிபர்கள் சரமாரியாக தாக்கியதில், சிறுவனின் தாயாரை படுகாயத்துடன் மருத்துவமனைவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் பெரம்பலூர் நாராயண பிள்ளை தெருவை சேர்ந்தவர்கள் ஞானேஸ்வரி, பிரகாஷ் தம்பதி. இவர்களுக்கு நான்கு வயது சிறுவன் உள்ளான். சம்பவத்தன்று சிறுவன் தீபாவளிக்காக வைத்திருந்த பட்டாசுகளை வீட்டின் முன்பாக வைத்து வெடித்து வந்துள்ளான். அப்போது ஒரு பெண்ணுடன் மது போதையில் வந்த ஐந்து வாலிபர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
அப்போது, சிறுவன் சத்தம் அதிகம் இல்லாத பட்டாசுகளை தான் வெடித்து வருகிறான், சிறிது நேரத்தில் பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விடுவான் என்று தாயார் ஞானேஸ்வரி கூறியுள்ளார். அப்போது ஞானேஸ்வரிக்கும் அந்த இளைஞர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை ஞானேஸ்வரி செல்போனில் வீடியோ பதிவும் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஞானேஸ்வரியை வீடியோ எடுக்கக் கூடாது என்று தடுத்ததோடு, அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதனடியே இளைஞர்களுடன் வந்த பெண் வேண்டுமென்றே அணிந்திருந்த உடைகளை தானே கிழித்துக்கொண்டு ஞானேஸ்வரியை மிரட்டியும் உள்ளார். இளைஞர்களின் தாக்குதல் காரணமாக, கண், முகம் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்த ஞானிஸ்வரி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஞானேஸ்வரியின் சொத்து தகராறு இருந்து வரும் நிலையில் எதிர் தரப்பினர் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ரவுடிகளை அழைத்து வந்து வேண்டுமென்றே தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் நபர்கள் என்று தெரிய வந்துள்ளது
அதில் குறிப்பாக, சேலத்தில் பிரபல ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் தொடர்புடைய சின்னவர் என்பவரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் குடிபோதை இளைஞர்களின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் ஞானோஸ்வரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?