விஜய்காக உயிரைவிட்ட மகன்... கதறும் பெற்றோர்....!
மாநாட்டிற்கு சென்ற சென்னை ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்த நிலையில், விஜய்காக உயிரை விட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் பரபரப்புக்கிடையே தமிழக வெற்றிக் கழக மாநாட்டை நடத்தி முடித்துள்ளார் நடிகர் விஜய். விக்கிரவாண்டியில் நடந்த இந்த மாநாட்டிற்கு சுமார் 5 லட்சம் பேர் திரண்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு கூட்டம் கூடியதால் அங்கு போதிய வசதிகளும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இவ்வளவு கூட்டம் கூடினால் என்றாலே அது தொடர்பான மரண சம்பவங்களும் நிகழ்வது ஒன்றாகி விட்டது.
தவெக மாநாட்டிற்கு வந்தவர் 6 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் மாநாடு பணி முடித்து விட்டு சென்ற போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். இதில் சென்னையில் இருந்து விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் லாரியில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்த வசந்த், ரியாஸ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நெருக்கமான நண்பர்களாக இருப்பது போலேவே "வெறித்தனமான" நடிகர் விஜய்யின் ரசிகர்கள். அவரது படம் ரிலீஸ் ஆனாலே இவர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம். முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று தியேட்டரை ரணகளப்படுத்துவது வசந்த், ரியாஸ் இருவரது வழக்கம்.
இது போல ஒன்றாகவே நடிகர் விஜய்யின் தவெக மாநாட்டிற்கு பைக்கில் சென்றனர். தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே அதிவேகமாக சென்று லாரி மீது மோதி 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசந்த், ரியாஸ். சாலையோரமாக வசித்து வருகின்றனர் அவர்களது பெற்றோர்கள். தனது மகன் நடிகர் விஜய் தீவிர ரசிகர் என்றும், விஜய்க்காவே உயிரை விட்டுள்ளார் என்றும் இறந்து போன வசந்தின் தாயார் கண்ணீர் விட்டு கதறுகிறார்.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றொரு இளைஞர் ரியாஸ். இவரும் இவரது தந்தை யூசுப்பும் தீவிர விஜய் ரசிகர். குடும்பத்தினரிடம் தெரிவிக்காமலேயே ரியாஸ் நண்பர்களுடன் சேர்ந்து விஜய்யின் மாநாட்டிற்கு சென்ற போது தான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குழந்தையில் இருந்தே நடிகர் விஜய்யின் பைத்தியம் தனது மகன் என்றும், குடும்பம் வாழ்வாதாரமின்றி தவிக்கிறது என்றும் நடிகர் விஜய் உதவி செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த ரியாஸின் தாயார் கல்பனா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பைக்கில் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிருமான விஜய், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாமல் இந்த 2 இளைஞர்களும் சென்றதால் தான் இந்த மரணத்திற்கு காரணம் என்கின்றனர் காவல்துறையினர். இதற்கிடையில் விஜய் தொண்டர்கள் மரணம் அடைந்துள்ளதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?