தமிழ்நாடு

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானியும், ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமாரும், குமரி மருத்துவக்கல்லூரி முதல்வராக ராம லட்சுமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி டீனாக அமுதா ராணி நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட்டை தமிழக அரசு நியமித்துள்ளது.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: போலி பட்டா விவகாரம் - மதுரை ஆட்சியர் அஜராகி விளக்கம்

மேலும், வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.