சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது தமிழக அரசு. இதனிடையே, மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வடதமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயாராக வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளதாகவும், அரக்கோணம் கப்பல் படை வீரர்கள், மத்திய கடலோர காவல் படையினரும் படகுகளுடன் தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையின் 13 கம்பெனிகளுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் மீட்பு பணியின் ஒரு பகுதியாக, நிவாரண மையங்கள், உணவுக் கூடங்கள் ஆகியை அமைக்கப்பட்டு. மக்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கும் பணியையும் கையாண்டது அரசு. தற்போது எத்தனை பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னையில் மொத்தம் 198 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 28 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிவாரண முகாம்களில் நேற்று மற்றும் இன்று காலை வரை மொத்தம் 2395 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகங்களில் நூறு சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சமுதாய உணவகத்தின் மூலம் நேற்று மற்றும் இன்று காலை மதியம் இரவு என மூன்று வேலைகளிலும் இதுவரை 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மேம்பாலத்தில் பார்க் செய்யப்பட்ட வாகனங்கள்... சென்னை மக்களுக்கு வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளை கடந்து, நாளை அதிகாலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, தரைக்காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.