Rameswaram Fishermen Arrest : ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படை அட்டகாசம்

Rameswaram Fishermen Arrest : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 27, 2024 - 07:23
Aug 27, 2024 - 14:56
 0
Rameswaram Fishermen Arrest : ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படை  அட்டகாசம்
Rameswaram Fishermen Arrested By Sri Lanka Navy

Rameswaram Fishermen Arrest : இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாக காணப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து  24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கச்சத்தீவுக்கு. இந்த தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமான நிலப்பரப்பாகவே இருந்தது. ஆனால் 1974ம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டை கலந்து ஆலோசிக்காமலேயே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது. 

இதன்பிறகு கச்சத்தீவு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்காலம் என்கிற உரிமைகள் இணைக்கப்பட்டு 1976ம் ஆண்டு இன்னொரு ஒப்பந்தம் உருவானது. ஆனால் இதனை இலங்கை அரசு அப்போதிலிருந்து தற்போது வரை அதை கண்டுக்கொள்ளவில்லை.

இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்.டி.ஐ தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், 1961ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டி அவசியமில்லை எனவும் இதனால் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகவும் கூறியதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கியில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதிக்கு இது தெரியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அண்ணாமலை வெளியிட்ட இந்த தகவல் போலியாக கூட இருக்கலாம் என்றெல்லாம் மறுத்து வந்தது காங்கிரஸ். இப்படியான அரசியல் குழப்பங்கள் கச்சத்தீவை சுற்றி நடந்து வருகிறது.

இதனால், கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்து அரசுக்கு சொந்தமானதாக ஆக்குவதும் தொடர்ந்து நடந்துக்கொண்டே வருகிறது. இப்படியான ஒரு சூழலில் தான் மீனவர்கள் கடலுக்கு தினமும் சென்று வருகின்றனர். 

மேலும் படிக்க: பாஜகவில் ஐக்கியமாகும் சம்பாய் சோரன்.. என்று இணைகிறார் தெரியுமா?

இந்நிலையில், கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக குற்றம்சாட்டி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் பயணித்த விசைப்படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களை விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து  சென்றுள்ளனர். முன்னதாக நாகை மீனவர்கள், தற்போது ராமேஸ்வரம்  மீனவர்கள் என அடுத்தடுத்து மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. 

மீனவர் கைதுக்கு எதிராக மத்திய அரசு விரைந்து ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow