தமிழ்நாடு

மொழிக் கொள்கையின் உறுதியைக் காட்டவே “ரூ” குறியீடு - முதலமைச்சர் விளக்கம்..!

தமிழ்நாடு சட்ட்ப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்து ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், பட்ஜெட் வெளியீட்டிற்கு பின்னர் வெளியான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மொழிக் கொள்கையின் உறுதியைக் காட்டவே “ரூ” குறியீடு - முதலமைச்சர் விளக்கம்..!
மொழிக் கொள்கையின் உறுதியைக் காட்டவே “ரூ” குறியீடு - முதலமைச்சர் விளக்கம்..!````````

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையின் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதை காட்டவே “ரூ” குறியீட்டை பயன்படுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, லோகோவில் ரூபாய் சின்னத்திற்கு பதில் தமிழ் எழுத்தான 'ரூ'-வை தமிழ்நாடு அரசு பயன்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதற்கு வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதைக் காட்ட பட்ஜெட் லோகோவில் ’ரூ’ என்ற வார்த்தை மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.இதனை மத்திய அரசும், தமிழைப் பிடிக்காதவர்களும் பெரிய செய்தியாக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். 

100 நாள் வேலைத் திட்ட ஊதியம், பேரிடர் நிதி, பள்ளிக் கல்வி நிதியை விடுக்க வேண்டும் என 100 கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், கோரிக்கை குறித்து பேசாத மத்திய நிதி அமைச்சர் ரூ என்ற வார்த்தைக்கு பதில் அளித்துள்ளதாகவும், அவர்களே பல பதிவுகளில் 'ரூ' என்றே குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்திய அளவில் நம் தமிழும் ஹிட்; பட்ஜெட்டும் ஹிட் என பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், அடித்தட்டு மக்களின் தேவைகள் மற்றும் மற்ற நாடுகளில் மக்களிடம் வரவேற்பு பெற்ற திட்டக்கள் என்னென்ன என்பதை பொருளாதார நிபுணர்கள் மூலம் ஆலோசித்துதான் பட்ஜெட்டை தயாரித்தாக தெரிவித்துள்ளார். 

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தால் அதனை பரிசீலிப்போம் என கூறியுள்ள முதலமைச்சர், எதையாவது சொல்ல வேண்டும் என்றே சொல்வது அரசின் மீதுள்ள வன்மத்தை மட்டுமே காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.  திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 93 விழுக்காடாக கடன் வளர்ச்சி குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதாக குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர், தமிழகத்தின் கடன் கட்டுக்குள் உள்ளதாக அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை கூறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காகவே கடன் தொகையை தமிழ்நாடு அரசு செலவிடுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் திட்டங்களை உரிய முறையில் உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.