தமிழ்நாடு

வனத்துறை காவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலரிடம், சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீட்டில் இழந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

வனத்துறை காவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!
வனப் பாதுகாவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

Fedex கொரியர் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் போன்றவை மூலமாக மும்பை போலீஸ்,  சிபிஐ அதிகாரி என கூறிக்கொண்டு பொதுமக்களை மிரட்டி, கோடிக்கணக்கான ரூபாய் சைபர் கிரைம் மோசடி என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் இதுபோன்று மிரட்டி மோசடி செய்து கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம் சமூக வலைதளங்கள் மூலமாக கவர்ச்சிகரமான டிரேடிங் விளம்பரங்களை வெளியிட்டு அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பொதுமக்களிடம் கோடி கணக்கான ரூபாய் சைபர் மோசடி கும்பல் கொள்ளையடித்து வருகிறது.

தொடரும் ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடிகளில் பெரும்பாலும் தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகள், நன்கு படித்தவர்கள் தான் அதிகம் பணத்தை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலராக கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற கிருஷ்ணகுமார் கௌசல் என்பவரிடமிருந்து 6.80 கோடி ரூபாய் பணத்தை ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலமாக சைபர் கும்பல் மோசடி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Read More: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு

வனத்துறையில் உயர் பதவியில் வகித்த முதன்மை தலைமை வன பாதுகாவலராக பணி ஓய்வு பெற்றவரும், ஐஎப்எஸ் அதிகாரியான கிருஷ்ணகுமார் கவுசல் சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அதில் தான் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றதாகவும் தன்னுடைய சேமிப்பு மற்றும் வைப்புத் தொகை அனைத்தும் சேர்ந்து சுமார் 6.80 கோடி ரூபாய் பணத்தை போலியான ஆன்லைன் டிரேடிங் செயலியில் முதலீடு செய்து ஏமாந்ததாக புகார் அளித்துள்ளார்.

தனக்கு இரண்டு டிரேடிங் செயலி whatsapp group இல் கடந்த டிசம்பர் மாதம் இணைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார், அதில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறும் வகையில் குறுஞ்செய்திகள் இடம் பெற்றதாக தெரிவித்துள்ளார். இதனை எடுத்து அந்த whatsapp குரூப்பில் வழிகாட்டுதன் அடிப்படையில் SMC apex என்ற செயலியும், sharada capital என்ற செயலி இரண்டையும் டவுன்லோட் செய்து முதலீடு செய்ய ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார். சுமார் ஒரு மாத காலத்தில் 20க்கும் மேற்பட்ட முறை முதலீடுகள் செய்ததாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 20 லட்சம் முதல் அதிகபட்சம் 70 லட்சம் இரண்டு வங்கி கணக்குகள் மூலம் முதலீடு செய்துள்ளார்.

அவ்வாறு முதலீடு செய்யும் பொழுது அதிக லாபம் கிடைத்தது போன்று செயலியில் காட்டியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அனுப்பப்படும் தொகை அனைத்தும் குறைந்தபட்சம் 35 லட்ச ரூபாய்க்கு உள்ளதாக இருக்க வேண்டும் என செயலி நிறுவனம் தரப்பிலிருந்து கேட்கப்பட்டதாகவும், பணம் அனுப்பப்படும் வங்கிக் கணக்குகள் அனைத்தும் பர்னிச்சர், பைனான்ஸ் மற்றும் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தொடர்பான வங்கிக் கணக்குகளில் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். திடீரென ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் வாங்கிய பங்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது உண்மையான பங்குகளின் விலை செயலியில் குறிப்பிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆன்லைன் செயலிகள்

இதனை எடுத்து பணத்தை திரும்ப எடுக்க முயற்சிக்கும் பொழுது மீண்டும் பணம் செலுத்துமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டதை அடுத்து, செயலியை ஆய்வு செய்ததாக கிருஷ்ணகுமார் கவுசல் தெரிவித்துள்ளார். அப்போதுதான் போலியான செயலிகள் மூலமாக அதிக லாபம் ஆன்லைன் டிரேடிங் கிடைப்பது போல் தன்னை ஏமாற்றி சுமார் 6.80 கோடி ரூபாய் அளவிலான பணத்தை ஒரு மாதத்தில் முதலீடாக பெற்று மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியான கிருஷ்ணகுமார் கவுசல் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More: புழல் மத்திய சிறையில் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல போலி நிறுவனங்கள் பெயரில் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு மணிமியுல்கல் போல் சைபர் கிரைம் மோசடி உங்களுக்கு உதவப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வங்கி கணக்குகளில் தான் ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியின் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் முதன்மை தலைமை வன பாதுகாவலராக உயர் பதவியில் வகித்த ஐ எஃப் எஸ் அதிகாரியையே மோசடி செய்து 6.80 கோடி ரூபாய் பணத்தை ஆன்லைன் டிரேடிங்கில் சைபர் மோசடி கும்பல் ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.