Tasmac ரெய்டில் திடீர் திருப்பம்.. ED விசாரணைக்கு வந்த புதிய சிக்கல் | Kumudam News
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மனு
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மனு
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான திமுக எம்பி கதிர் ஆனந்திடம் அதிகாரிகள் 3 மணி நேரத்தை கடந்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், முழுமையான விசாரணைக்கு பிறகே தகவல்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலை ஏறுபடுத்தவே தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரது மகன் பாஜகவில் ஐக்கியமாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், 8.38 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.
தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 15 மணிநேர சோதனைக்கு பின், வெளியே வந்து அமலாக்கதுறை அலுவலர்களை, ஆதரவாளர்கள் தள்ளிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சையில் உள்ள தனது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, தொண்டர்களிடம் சாப்பிட்டு வரச் சொல்லி கூலாக சொன்னது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை தள்ளிவைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் அக்டோபர் 4-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து விவரங்கள்கேட்டு 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணையை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது சொத்து விவரங்களை கேட்டு 10 சார்பாதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.