K U M U D A M   N E W S

"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.." ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலநிலை மாற்ற விழிப்புணர்வுக்கு நிதி ஒதுக்கீடு

காலநிலை மாற்ற வீராங்கனைகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி.. கொட்டும் மழையில் நேர்ந்த கொடுமை - நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி காட்சி

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொட்டும் மழையில் மூதாட்டியை காக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டும் வரை கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி இருந்துள்ளார்.

சுவரில் மோதிய பஸ்.. ஜஸ்ட் மிஸ்!! - டிரைவரால் பிழைத்த 10 உயிர் - திக் திக் காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

செயலில் ஒன்றுமில்லை.. விளம்பரம் தான் அதிகமா இருக்கு.. தமிழிசை சவுந்தரராஜன்

மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் தான் அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை - தமிழக அரசுக்கு EPS கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் தங்கும் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

சென்னைக்கு ரெட் அலர்ட்.. முதலமைச்சர் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறும். பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... ஆட்சியர்களுக்கு பறந்த கடிதம்

நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

"மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு திமுக அரசு” - ராஜன் செல்லப்பா

"மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு திமுக அரசு” - ராஜன் செல்லப்பா

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே டிரைவிங்... ஓட்டுநருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்... தமிழக அரசு அதிரடி!

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசுப் பேருந்தை ஓட்டிய டிரைவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்கும் விதமாக, போக்குவரத்துத் துறை அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிரியர்களின் பைக்கை கழுவிய மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்

பெரம்பலூர்: ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களை கழுவ வைத்துள்ளனர்

#BREAKING: இப்படி ரேட் ஏறுதே.. இது Ice cream-ஆ இல்ல தங்கமா?

ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.3 முதல் ரூ.70 வரை அதிகரிப்பு

மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட நிதி எத்தனை கோடி தெரியுமா? | Kumudam News 24x7

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு.

Samsung Protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... கொடுங்கோன்மை தான் திராவிட மாடலா..? சீமான் கேள்வி!

உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த ஆக்சனில் ஸ்டாலின்... பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்...

2026ல் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் திமுக ஈடுபட்டு வரும் சூழலில், ஏற்கனவே துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது கட்சியை வலுப்படுத்தும் முனைப்பில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. அவ்வகையில் சீனியர்களின் பலரது மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

Vijaya Nallathambi Arrest : முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது.. பண மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி நடவடிக்கை

Vijaya Nallathambi Arrest in Money Fraud : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

என்.எல்.சி வழக்கு... மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும்  இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

Air Show 2024: மெரினா கோர சம்பவம்... அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை... சீமான் கண்டனம்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TVK Vijay: வான் சாசக நிகழ்ச்சியில் விபரீதம்... தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த தவெக தலைவர் விஜய்!

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

#JUSTIN: சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை | Kumudam News 24x7

அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் வார்டுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் இரவு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.