K U M U D A M   N E W S

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசு.. அன்புமணி குற்றச்சாட்டு!

''கர்நாடக அரசு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீரில் பாதியைக் கூட வழங்கவில்லை. நடப்பாண்டில் ஒரு டி.எம்.சி தண்ணீர் கூட கர்நாடகத்திலிருந்து காவிரியில் திறந்து விடப்படவில்லை''

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தலா?... நடந்தது என்ன? அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்!

செங்கல்பட்டில் குழந்தைகள் 2 பேரும் கடத்தப்பட்டதாகவும், ஒரு பள்ளியின் முன்பே குழந்தைகளை கடத்திச் செல்லும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது எனவும் நேற்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.

வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?... 'திமுக' அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

''திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன்''

வேங்கைவயல் சம்பவம்: ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல் சம்பவத்தில் சந்தேகத்துக்குரியவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் குரல் மாதிரி சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

'இந்தி பேசாத மாணவர்களுக்கு அநீதி'... பொங்கிய சு.வெங்கடேசன்... மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம்!

''சிபிஎஸ்இ நியமன தேர்வில் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்''

பள்ளி கல்வி இணை இயக்குநர் பதவிக்கு கடும் கிராக்கி… கோடிக்கணக்கில் பேரம் பேசும் பெண் அதிகாரி..?

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பதவிக்கு கோடிக் கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நீட்' தேர்வு முறைகேடு வழக்குகள்... ஜுலை 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்... பல்வேறு விஷயங்களில் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி: 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன...எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... சிறப்பம்சங்கள் என்னென்ன?

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று முதல் அமலாகி உள்ளது.