சமத்து நடிகை என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக Stress Bird-ஆக வலம் வருகிறார். கோலிவுட்டில் அறிமுகமான அதே வேகத்தில், டோலிவுட், பாலிவுட் என அசுர வேகம் காட்டிய சமந்தாவுக்கு, சில ஆண்டுகளாக சோதனை மேல் சோதனை என்று தான் சொல்ல வேண்டும். நாக சைதன்யாவுடன் ரகசிய காதல், குடும்பத்தினர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம், இறுதியாக காரணம் என்னவென்றே தெரியாமல் திடீரென விவாகரத்து. கேரியரில் கில்லியாக இருந்தாலும், சமந்தாவின் குடும்ப வாழ்க்கை, அவரே நினைத்துப் பார்க்காத ஏமாற்றங்களை கொடுத்தது.
ஆனாலும் அதையெல்லாம் நினைத்து வருத்தப்படாமல் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார் சமத்து சமந்தா. இதனிடையே சில மாதங்களாக அவர் மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபலாவுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், சமந்தா மட்டும் இன்னும் சிங்கிளாகவே சிறகடித்து வருகிறார். இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்த சமந்தா, தனியாக இருப்பது ஒன்னும் மோசம் கிடையாது, தனியா இருந்தாலும் சந்தோஷமா இருக்கலாம். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே பெண்ணின் வேலை கிடையாது. நாக சைதன்யா திருமணம் பற்றி எனக்கு பொறாமையும் இல்லை எனவும் கூறியிருந்தார்.
அதேபோல், சமந்தாவை பிரிந்த நேரம், என்னை எல்லோரும் ஒரு குற்றவாளியை போல பார்த்தனர். இது என் வாழ்க்கையில் மட்டும் நடந்ததை போல சித்தரித்தனர். ஆனால் ரொம்பவே சிந்தித்து, பெரும் மரியாதையுடன் தான் இந்த முடிவை எடுத்தேன். நானும் உடைந்த குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் அந்த அனுபவம் எனக்கு அதிகம் என நாக சைதன்யாவும் சமீபத்தில் விளக்கம் கொடுத்திருந்தார். இப்படி மாறி மாறி விளக்கம் கொடுக்க, சமந்தா சிங்கிளாக இருப்பது தான் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாவில் போட்டுள்ள ஒரு போஸ்ட், இப்போது வைரலாகி வருகிறது.
Secret Alchemist வகை perfume ஒன்றை கையில் வைத்தபடி செக்ஸியான லுக்கில் ஒரு போட்டோ, ஸ்லீவ்லெஸ் அணிந்துகொண்டு கிறக்கமான பார்வையில் ஒரு போட்டோ என இப்படி இன்னும் சில புகைப்படங்கள் இந்த போஸ்ட்டில் உள்ளன. முக்கியமாக ஒரு போட்டோவில், சமந்தாவும் அவருக்கு எதிரில் இருக்கும் நபரும், சியர்ஸ் அடித்தபடி ஜூஸ்-ஐ கையில் வைத்துள்ளனர். இந்த போட்டோவை பார்த்த பலரும், “ஹலோ சமந்தா மேடம்... யார் அந்த சியர்ஸ் அடிக்கும் சீக்ரெட் சார்” என கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர். காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக சமந்தா இந்த போஸ்ட்டை போட்டுள்ளது தான் ஹைலைட்டே. ஆகமொத்தம் சமந்தாவும் தனது சிங்கிள் விரதத்தை முடித்துக்கொள்ளப் போகிறார் என்றும், ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருந்தாலும் யார் அந்த சியர்ஸ் சார் என்பது, சமந்தாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்பது குறிப்பிடத்தக்கது.