அரசியல்

‘எங்களை சீண்டாதீர்கள்’ - தவெக தலைவர் விஜய்க்கு சேலம் பாமகவினர் எச்சரிக்கை

35 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாமக கொடி கம்பத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் அபகரித்ததால் பாமக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘எங்களை சீண்டாதீர்கள்’ - தவெக தலைவர் விஜய்க்கு சேலம் பாமகவினர் எச்சரிக்கை
பாமக கொடி கம்பத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் அபகரித்ததால் தொண்டர்கள் போராட்டம்

சேலம் அருகே எருமபாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே, கடந்த 35 ஆண்டு காலமாக பாமகவினர் கொடிக்கம்பம் அமைத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் நேற்று பாமகவின் கொடி கம்பத்தை ஆக்கிரமித்தனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகீறது. இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பாமக நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இன்று தமிழக வெற்றிக் கழக தொண்டர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் பாமக தொண்டர்கள் புதிதாக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நிகழ்விடம் சென்ற காவலர்கள் புதிதாக கொடி கம்பம் நடக்கக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பில் இருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. பாமக தொண்டர்கள் தொடர்ந்து கொடிக்கம்பத்தை நட்டு வைத்தனர். அப்போது, பாமக தொண்டர்களை சீண்ட வேண்டாம் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சேலம் பாமகவினர் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விஜய்க்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் பாமக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். வழக்கமாக திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், என பிற கட்சிகளுடன் கொடி கம்பம் அமைப்பதில் மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தினருடனும் பிரச்சனை தொடங்கியுள்ளது.