Manju Virattu in Chinna Kundrakudi : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சின்ன குன்றக்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 165 மாடுகள் பதிவு செய்யப்பட்டதில் 13 மாடுகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது அதனை தொடர்ந்து 152 காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்றனர் 25 மாடு வீரர்கள் உறுதி மொழியை ஏற்று மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்றனர்.
இதில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு சில்வர் அண்டா பரிசுகள் வழங்கப்பட்டது அதுபோல் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு சில்வர் அண்டா பரிசுகள் வழங்கப்பட்டது அதுபோல் அரசு அனுமதி இல்லாமல் கட்டுமாடுகளாக 300-க்கும் மேற்பட்ட மாடுகள் ஆங்காங்கே வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டதில் 40 பார்வையாளர்கள் காயமடைந்தனர். அதில் 13 பேர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் திருமயத்தை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் மாடு குத்தியதில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மாடுபிடி வீரர்கள் 25 பேர் களத்தில் உள்ள நிலையில், பார்வையாளர்கள் 40 பேர் காயமடைந்தனர்.
பரிசுகள், பாராட்டுகள் என கலை கட்டிய இந்த மஞ்சுவிரட்டிப் போட்டியை பெரும்பாலான கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்த மகிழ்ந்தனர். காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடந்த இந்த போட்டியில் இளைஞர்கள் ஆர்வமாக வந்து காளைகளை அடக்க முயன்றனர். இந்த மஞ்சுவிரட்டு போட்டி இளைஞர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.