4 சென்ட் இடம்.. 20 லட்சம் ரொக்கம்... நாதக நிர்வாகி கொலை - சிறார் உட்பட 6 பேர் கைது

Naam Tamilar Katchi : 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியதை கண்டதும், பாலமுருகன் கதறிய படி உயிரை காப்பாற்றுங்கள் என ஓடியுள்ளார்.

Jul 17, 2024 - 19:59
Jul 18, 2024 - 21:02
 0
4 சென்ட் இடம்.. 20 லட்சம் ரொக்கம்... நாதக நிர்வாகி கொலை - சிறார் உட்பட 6 பேர் கைது
கொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலமுருகன்

4 சென்ட் இடம் மற்றும் 20 லட்சம் ரூபாய் சொத்துக்காக மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை, சம்மந்தி மற்றும் மருமகனே ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Naam Tamilar Katchi : மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் வீட்டின் முன்பு இன்று அதிகாலை 6.30 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்ட செல்லூரை சேர்ந்த சிதம்பரம் என்பவரது மகன் பாலமுருகன் (50). இவர் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் உள்ளார்.

இவரை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் விரட்டியுள்ளது. கதறிய படி உயிரை காப்பாற்றுங்கள் என கூறி ஓடியுள்ளார். அவரை விரட்டிய அக்கும்பல் மறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர். இதில், படுகாயத்துடன் கிடந்த பாலமுருகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பாலமுருகன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட மர்ம கும்பல்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர். தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரடி பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும்  பாண்டியராஜன் என்பவருக்கும் 4 சென்ட் இடம் 20 லட்சம் மதிப்புள்ள சொத்துப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் பாண்டியராஜனுக்கு ஆதரவாக சகோதரர் பாலசுப்பிரமணியன் சொத்தினை சமமாக பிரித்து தருமாறு கேட்டு மகாலிங்கத்திடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண பாண்டியராஜனின் மகள் பிரியா என்பவரை மகாலிங்கத்தின் மகன் அழகுவிஜய் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். 

திருமணமான பிரியா மற்றும் அழகுவிஜய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா தனது தந்தை பாண்டியராஜன் வீட்டில் இருந்து கொண்டு அழகுவிஜய் மீது நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பாண்டியராஜன் மாகலிங்கத்திடம் தனது மகளுக்கு சேர வேண்டிய சொத்தினை பிரித்து தருமாறு கேட்ட போது, ஏற்ப்பட்ட பிரச்சனை தொடர்பாக பாண்டியராஜனின் புகாரின்படி மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாண்டியராஜனின் மகள் பிரியா கணவர் அழகுவிஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மகாலிங்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தனது தந்தை மற்றும் பெரியப்பா பாலசுப்பிரமணியனை, ஏதாவது செய்ய வேண்டும் என முடிவில் உள்ளனர் என கூறியுள்ளார்.

எனவே, பாண்டியராஜன் மற்றும் பாலசுப்பிரமணியன் தன்னை தாக்குவதற்கு முன்பாக அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த மகாலிங்கம் மற்றும் மனைவி நாகம்மாள் அவரது மகன் அழகுவிஜய் ஆகியோர் தங்களிடம் லோடு மேன்களாக வேலை செய்து வரும் ஒரு (சிறார்), பரத், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு வழக்குகளில் குற்றவாளியான பாலசுப்ரமணியனை வெட்டிப்படுக்கொலை செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியனை கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலை செய்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலையானது இருதரப்பினருக்குமிடையே திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையாலும், அவர்களுக்கிடையே உள்ள சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொலைக்கு மூளையாக செயல்பட்ட மாகலிங்கம் மற்றும் மனைவி நாகம்மாள் ஆகியோர் தலைமறைவாகினர். தொடர்ந்து, மகன் அழகுவிஜய் மற்றும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான மாகலிங்கம் தாய் நாகம்மாள் ஆகியோர் குறித்து தேடுதல் வேட்டை போலீசார் ஈடுபட்டுள்ளனர். வெறும் 4 சென்ட் இடம் 20 லட்சம் மதிப்புள்ள சொத்திற்கு நடைபெற்ற கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow