என் ரசிகர்களின் அன்பு தாய் பாசம் போன்றது - நடிகர் சூர்யா உருக்கம்
நடிகர் சூர்யாவின் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியானது. இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா தொடர்ந்து பங்கேற்று வரும் நிலையில், நடிகர் சூர்யாவின் பிரத்யேக பேட்டியை காண்போம்.
கங்குவா போன்ற கதைக்களத்தில் நீங்கள் ஏழாம் அறிவு படத்தில் இதற்கு முன்னர் நடித்துள்ளீர்கள். அந்த திரைப்படத்திற்கு நம்மிடம் வரலாறுகள் இருந்தன. போதிதர்மன் பற்றி தெரிந்துகொள்ள பல்வேறு வழிகள் இருந்தன. இந்த படத்திற்கு இயக்குநரின் தேடல் ஒருபுறம் இருந்தாலும், மூன்றாம் நூற்றாண்டில் உருவான கதை என்று சொல்கிறார்கள், உங்களின் தேடல் கங்குவா படத்திற்கு தயாராக எவ்வாறு அமைந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா,
நம்முடைய வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு சாதாரண நாட்கள் தான், ஆனால் சில நாட்கள் நம் வாழ்வின் முக்கிய நாட்களாக அமையும், முக்கிய நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு அனுபவமாக அமையும், அது போல கஜினி, சிங்கம் படங்களும் ஒரு அனுபவம். அது போல தான் கங்குவா படமும் என் வாழ்வின் சிறந்த அனுபவமாக உள்ளது.
நிறைய நல்ல திரைப்படங்கள் வரும் போது, திடீரென அவ்வையார் திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக யானைகள், கோட்டைகள் என்று 2 முதல் 3 வருடங்கள் திரைப்படங்களை எடுத்தார்கள், சந்திரலேகா, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களை அதே போன்று பல வருடங்கள் எடுக்கப்பட்டவை.
திரைத்துறைக்கு வந்து 27 வருடங்கள் ஆன போதிலும், எப்போது தனித்துவமான திரைப்படங்களை தரப்போகிறோம் என்ற கேள்வி எழுந்தது. அப்போது இயக்குநர் சிவா கங்குவா கதையை தயங்கி என்னிடம் கூறினார். ஆனால் நிறைய உழைக்க வேண்டி இருக்கும், நிறைய நாட்கள் ஆகும் என்று முன்னரே கூறினார். அப்போது 2 வருடத்தை கொடுத்தால் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய திரைப்படமாக கங்குவா அமையும் என்று சுட்டிக்காட்டினார். மேலும், கங்குவா திரைப்படம் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் ஸ்பெஷலான திரைப்படம், நிறைய ரசிகர்களை கங்குவா திரைப்படம் கவர்ந்திழுக்கும் என்று சூர்யா கூறியுள்ளார்.
தமிழ் மொழியில் இருந்து இப்படி ஒரு படம் உருவாகியுள்ளது சந்தோஷமாக உள்ளது. எங்கே இருந்தாலும் இது நம்முடைய வேர் என்று தெரிவித்துள்ளார்.
பாபி தியோல் உதிரனாக அந்த காஸ்டியூமில் நடிக்கும் போதும், பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. தமிழ் சினிமாவில் நடிப்பது, நான் அவருடன் நடிப்பது மறக்க முடியாத நிகழ்வு என்று கூறினார். குழந்தை போன்ற குணமுடையவர், நாம் பார்த்து வியந்த ஒருவர் நம்முடன் இருப்பது கனவு போன்று இருந்தது. அவருடைய தன்னம்பிக்கை, அவரை இந்த இடத்தில் வைத்துள்ளது. அவர் அனைவரின் அன்பிற்கும் தகுதியானவர், வேறு மொழி திரைப்படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் சிவா அவரை நன்றாக பார்த்துக்கொண்டார். 22 நாட்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்திருக்கிறார் என்று பாபி தியோல் பற்றிய நினைவுகளை சூர்யா பகிர்ந்து கொண்டார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை உங்களுடைய தேர்வுகள் எப்போதும் தனித்துவமாக இருக்கிறது. உங்களது திரைப்படங்கள் வேறு மொழிகளில் வெளியாகும் போது பெரிய அளவில் வசூலைக் குவிக்கிறது. நீங்கள் எப்படி கதைக்களத்தை தேர்வு செய்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா,
கஜினி திரைப்படம் தான் முதலில் மொழி கடந்து எனக்கு பெரிய அங்கீகாரத்தை வழங்கியது. முருகதாஸ் என்னிடம் கதை சொல்லும் போது, குருவி தலையில் பனங்காயை வைக்கிறார்களே தாங்குமா என்ற கேள்வியே எழுந்தது. இப்போ இல்லாமல் எப்போது என்ற கேள்வியே கஜினி உருவாக காரணமாக அமைந்தது. பின்னர் சிங்கம் திரைப்படம் நான் பண்ண முடியுமா? ஹரி கேட்கிறாரே, சிங்கம் படத்தின் வசனங்கள் பேச என்னால் முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு இயக்குநரின் கதைக்கு உருவம் கொடுக்க நம்மிடம் என்ன உள்ளது என்பதை யோசிக்க வேண்டும். ஆனால், என்னுடைய தன்னம்பிக்கையே இதையெல்லாம் சாத்தியமாக்கியது. இந்த நேரத்தில் என்னை நம்பி இது போன்ற கதைகளுக்கு என்னை தேர்வு செய்த இயக்குநர்களுக்கு நான் நன்று தெரிவித்து கொள்வதாக கூறினார்.
தமிழ், மலையாளம் என்று தற்போது யாரும் பிரித்து பார்ப்பதில்லை. நல்ல திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. டெல்லியில் கங்குவா என்று தெளிவாக கூறுகிறார்கள். அவர்களுக்கு தற்போது சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தமிழ் மொழி திரைப்படங்களுக்கு ஆதவளிக்கிறார்கள்.
இயக்குநர் சிவா, பல்வேறு தனித்திறமைகளை கொண்டவர், அவர் குழந்தை போன்று கதைக்கூறினார். அவர் கதைக்கூறும் போதே இது போன்ற ஒரு உலகத்தை நாம் காட்டப்போகிறோமா? என்று ஆச்சரியமாக இருந்தது. தமிழில் உள்ள அனைத்து இலக்கியங்கள் மற்றும் புத்தங்களை சிவா படித்துள்ளதார். ஒருவர் இவ்வளவு அறிவாக இருக்கிறார். ஆனால், அமைதியாக இருக்கிறார். அவரைப்பற்றி எந்த மீடியாவும் கூறவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். இந்த திரைப்படத்தில் சிறுத்தை சிவா யாரென்று உங்களுக்கு தெரியும் என்று சூர்யா கூறினார்.
எல்லோரும் சொல்வார்கள் ரசிகர்களால் நான் என்று, நானும் அதை உணர்கிறேன். நிறைய கஷ்மான நாட்களில் என்னுடன் இருந்தவர்கள். நீங்கள் நிறைய திரைப்படங்கள் செய்துவிட்டீர்கள். இதுவரை பண்ணாத ஒன்றை பண்ணுங்கள் என்று சொல்வது போல தான் என் காதில் கேட்கிறது. அதனால் தான் வரிசையில் கங்குவா என்றும், அவர்கள் என் மீது அளவுக்கடந்த பாசம் வைத்துள்ளனர். என்னுடைய ரசிகர்கள் நான் வளரனும், என்னுடைய வெற்றியை பார்க்கனும் என்று சொல்கிறார்கள். அது வேறுமாதிரியான உணர்வு, என் மீது தாய் பாசம் போன்றது என்று கூறினார்.
What's Your Reaction?