'Mission Impossible' டீசர்: ரசிகர்களை மிரட்டும் டாம் க்ரூஸ்! இதுதான் கடைசி சீசனா?
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் ‘மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெகனிங்’ Mission: Impossible – The Final Reckoning படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு என்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் திரைப்படங்களுக்கு தரும் முக்கியத்துவம், ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் கிடைப்பதை நாம் பார்க்க முடியும். இந்த வரிசையில் மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் கடைசி பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, அப்படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 1996ம் ஆண்டு வெளியான நிலையில், இப்படத்தின் ஏழு பாகங்களும் அடுத்தடுத்து வெளியாகி சர்வதேச அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகர் டாம் குரூஸ் நடிப்பில், ‘மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெகனிங் படத்தின் எட்டாவது பாகம் மிக பிரமாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி திரைப்படம் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெகனிங்’ திரைப்படத்திற்கே உள்ள தனித்துவத்துடன் அதிரடி ஆக்சஷன் நிறைந்த காட்சிகள், பின்னணி இசை நிறைந்த டீசர் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கடல், பனிக்கட்டி என தண்ணீரை சுற்றியே இந்த திரைப்படத்தின் டீசரின் பெரும்பாலான காட்சிகள் அமைந்துள்ளதால், தண்ணீரை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெகனிங் படத்தின் ஏழாவது பாகம் ‘ஏஐ’ மையமாக வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய 62 வயதில் டூப் எதுவும் இல்லாமல் அதிரடி காட்சிகளிலும், ஹெலிகாப்டரில் சாகசம் செய்வது போன்ற காட்சிகளில் கலக்கி வரும் டாம் குரூஸ் இந்த படத்தில் டாம் குரூஸ் இத்திரைப்படத்தில் அதிரடி காட்டியுள்ளார். மேலும், டீசரின் இறுதிக்காட்சியில் Trust me.. One Last Time என டாம் க்ரூஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது.
கடந்த சீசனை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி தற்போது மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெகனிங் படத்தையும் இயக்கியுள்ளார். கடந்த சீசன்களை போன்றே இந்த சீசனும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சர்வதேச அளவில் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் வியூஸ்களை இந்த டீசர் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
டீசரின் காட்சிகள் ஒட்டுமொத்த பயணத்தையும் காட்டுவது போல அமைந்துள்ளதால் இதில் அவரது மரணம் தான் இந்த திரைப்படத்தின் கடைசி பாகமாகவும் இருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ‘மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெகனிங் திரைப்படம், அடுத்த வருடம் மே மாதம் 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. குறிப்பாக இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது.
டீசரை காண கீழே பார்க்கவும்:
What's Your Reaction?