15 வருட காதலனை கரம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
15 வருடமாக தான் காதலித்து வரும் தனது கல்லூரி காதலனை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல், இந்தியிலும் கால்பதிக்க உள்ள நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் அவருடைய காதலனை திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளங்களை வைத்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா தம்பதிக்கு மகளாக திரையுலகில் அறிமுகமானாலும், அவரின் விடா முயற்சியே அவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்தது.
தொடரி, ரஜினிமுருகன், ரெமோ போன்ற திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது. தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார்.
கீர்த்தி சுரேஷ் பள்ளியில் படித்தபோது கொச்சியில் இருக்கும் கல்லூரியில் படித்து வந்த ஆண்டனியை 15 வருடங்களாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்த நிலையில் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் நடைபெற உள்ளது.
கீர்த்தி சுரேஷ் சினிமா துறையில் உள்ளவர்களை காதலிப்பதாக பல சர்ச்சைகள் உலா வந்தன. அதில் குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத்தை, கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக கிசுகிசு உலா வந்தது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பெற்றோர்கள் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
திரைத்துறையில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு பிறகு திரைத்துறையை விட்டு விலகியுள்ளனர். ஒரு சில நடிகைகள் மட்டும் மீண்டும் நடிக்க வந்துள்ளனர். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடிப்பாரா மாட்டாரா? என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷூக்கு எப்போது, திருமணம் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ரஜினியின் பிறந்த நாளான வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதற்கான வேலைகள் சைலண்டாக நடைபெற்று வருகின்றன என்று கூறப்படுகிறது. இத்தகவலை கீர்த்தி சுரேஷ் தரப்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் என்ற தகவல் வெளியான நிலையில், அதற்கு கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தககது.
What's Your Reaction?