சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா விற்பனை செய்யப்டுவதாக வடபழனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கண்காணித்த போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த மதன், ஓம் பிரகாஷ் என்பது தெரிந்தது. இவர்கள் குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்து போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 53 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நடத்திய விசாரணையில், கைதான மதன் தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
பள்ளி மாணவர்களுக்கு இவர் குட்கா சப்ளை செய்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான ஓம் பிரகாஷ் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.