தமிழ்நாடு

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!
கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில் காரமடை நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பெரியதொட்டிப்பாளையம் உட்பட்ட பகுதியில் அரசு பள்ளி கட்டிடம் சிதலம் அடைந்து இருப்பதாக இடிக்கப்பட்டு மீண்டும் புதிதாக 67 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டிடமானது கட்டப்பட்டது. 

இந்த கட்டிடத்தை கடந்த டிசம்பர் மாதம் பள்ளி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பள்ளியில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பயன்படுத்த கழிப்பறை இல்லாத நிலை உள்ளது 67 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கீழ் தளத்தில் 2 வகுப்பறைகளும் மேல் தளத்தில் 2 வகுப்பறைகளும் உள்ளன.

67 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில்  மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கழிப்பறை இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கழிப்பறை இல்லாத காரணத்தால் மாணவ மாணவிகள் அருகே உள்ள பகுதிகளுக்கு சென்று தங்களது இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து பாலியல் ரிதியான பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை இல்லாத காரணத்தால் மாணவிகள் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே சென்று தங்களது இயற்கை உபாதைகளுக்கு செல்லும் போது குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

எனவே மாவட்ட நிர்வாகமும் காரமடை நகராட்சியும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த பள்ளிக்கூட கட்டிடத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.