”இந்த நிலைப்பாட்டுலேயே இருங்க..” – விஜய்க்கு அட்வைஸ் சொன்ன தமிழிசை!

தி.மு.க.வை எதிர்ப்பதில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். 

Oct 30, 2024 - 00:35
 0
”இந்த நிலைப்பாட்டுலேயே இருங்க..” – விஜய்க்கு அட்வைஸ் சொன்ன தமிழிசை!

பாஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதி மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1000 நபர்களுக்கு புத்தாடை, இனிப்பு, பட்டாசு, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நமிதா, மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். 

நிகழ்ச்சிக்கு முன்பு மேடையில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ”பிரதமர் பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். புதியதாக வருபவர்கள் எல்லாம் ஒன்றியம்  என்ற வார்த்தையை சொல்லி கொண்டிருக்கிறார்கள். மழையில் சென்னை மிதக்க போகிறதா பயமாக இருக்கிறது அது மாநகராட்சியும் சரி தமிழக அரசும் சரி எந்தவித முன்னேற்பாடும் செய்வதில்லை.‌  மதுரை மிதந்து கொண்டிருக்கிறது.. மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர்  வெங்கடேசனுக்கு  அமைச்சர் மூர்த்திக்கும்  சண்டை வந்து கொண்டிருக்கிறது” என்று பேசினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது நிச்சயமாக 2026 பாரஜாக மிகப்பெரிய வெற்றி பெறும். இப்போது திமுகவை எதிர்ப்பதில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் திமுக தான், திமுக எதிர்ப்பில் அவர் தீவிரம் காண்பிப்பார்” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow