Female Police Attack : பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்..அதிரடி காட்டிய போலீஸ்

Female Police Attack in Chennai : கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியவர்களை கலைந்து செல்லும்படி கூறிய பெண் காவலரை பிளேடால் வெட்டியதால் பரபரப்பு. 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Aug 26, 2024 - 09:52
Aug 26, 2024 - 17:12
 0
Female Police Attack : பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்..அதிரடி காட்டிய போலீஸ்

கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியவர்களை கலைந்து செல்லும்படி கூறிய பெண் காவலரை பிளேடால் வெட்டியதால் பரபரப்பு. 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

Female Police Attack in Chennai : சென்னை ராயப்பேட்டை விஎம் தெருவில் அமைந்துள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கூழ் எனவும், திருவிழாவில் பல வண்ணங்களில் மிளுரும் கோயிலும், பக்தர்களை மகிழ்விக்க மேள தாளம்,  குழந்தைகளை ஈர்க்கு தெருக்கடைகளின் பொம்மைகள் என திருவிழாவே களைக்கட்டியது.

இதுபோன்ற பக்தி கலந்த திருவிழா கொண்டாட்டம் என்று கூட பாராமல் சிலர் மது அருந்திவிட்டு பங்கேற்பதும் வழக்கம். இப்படிபட்டவர்களால் எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது  என்பதற்காகவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுவடுவர். அதுபோலத்தான், சென்னை ராயப்பேட்டை  விஎம் தெருவில் அமைந்துள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் திருவிழாவிற்கு மது அருந்திவிட்டு சிலர் வந்திருந்தனர். அங்கிருந்த மேளதாளங்களுக்கு மதுபோதையில் அவர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். இதனால் பிறருக்கு இடையூறு ஏற்பட்டதால் இவர்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அறிவுறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த அங்கு போதையில் இருந்த நான்கு பேரில் ஒருவர், தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல்  பணியில்  இருந்த  பெண் காவலர்  கவுசல்யா என்பவரின் வலது கையில் பிளேடு போன்ற கூர்மையான பொருட்களால் கீறிவிட்டு  தப்பி ஓடியிருக்கின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்  பணியில்  இருந்த மற்றொரு காவலர் தாக்குதலுக்குள்ளான பெண் காவலரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கவுசல்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  

மேலும் படிக்க: சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.... தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல அனுமதி!

வெட்டுக்காயம் ஆழமாக பதிந்ததால் அவருக்கு ஐந்து தையல்கள் போடப்பட்டது.   இந்நிலையில்,இது குறித்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மதுபோதையில் ரகளை செய்தது ஸ்ரீதர், அஜய், கிஷோர், சசி ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதில் அஜய் தான் பெண் காவலரை பிளேடால் வெட்டியது என்பதும் தெரிய வந்தது.   மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow