தமிழ்நாடு

” *** உனக்கு கண்டக்டர் சீட் கேட்குதா!” முதியவரை தாக்கிய நடத்துனர் அரசு பஸ்ஸில் அநியாயம்

அரசு பேருந்தில் நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் என்று பாராமல் சட்டையை பிடித்து, இழுத்து தாக்கும் அளவிற்க்கு என்ன நடந்தது? ’92A’ பஸ்ஸில் நடந்தது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

” *** உனக்கு கண்டக்டர் சீட் கேட்குதா!” முதியவரை தாக்கிய நடத்துனர் அரசு பஸ்ஸில் அநியாயம்
” *** உனக்கு கண்டக்டர் சீட் கேட்குதா!” முதியவரை தாக்கிய நடத்துனர் அரசு பஸ்ஸில் அநியாயம்

நடத்துனர் இருக்கையில் அமர்ந்ததாக கூறி ஓடும் பேருந்தில் முதியவரை நடத்துனர் தாக்கிய சம்பவம் கன்னியாகுமரியை நடுநடுங்க வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருந்து பண்ணிப்பொத்தை பகுதிக்கு ’92A’ என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் கல்லூக்கூட்டம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து முதியவர் ஒருவர் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறிய முதியவர் பின்பக்க படிக்கட்டு அருகே உள்ள நடத்துனர் இருக்கையில் அமர்ந்துள்ளார். இதனால் கோபமடைந்த நடத்துனர் ஸ்டாலின் ஐசக், அந்த முதியவரை வேறு இருக்கைக்கு செல்லுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் வேறு இருக்கைக்கு செல்ல முயன்ற முதியவர் நடத்துனரை ஒருமையில் பேசி திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் ஐசக், அந்த முதியவரை சட்டையை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலான நிலையில், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது. மேலும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என குளச்சல் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தினேஷ் உறுதியளித்துள்ளார்.

அரசு பேருந்தில் ஏறிய முதியவரை நடத்துனரே தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.