K U M U D A M   N E W S

Author : Vasuki

ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் ..!

நிதிநிலை அறிக்கையில் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் சார்ந்த அறிவிப்புகள் இல்லாததால் மார்ச் 23 ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளிவரும்.. பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேட்டி

ஈரோடு மாநகராட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

கரூர் தென் திருப்பதியில் மாசி மாத தெப்பத்திருவிழா.. பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு..!

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் வழிப்பட்டனர். 

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு ரத்து செய்த நீதிமன்றம்..!

முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில்  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

கோவையில் நடந்த துணிகரத் திருட்டு - 13 சவரன் நகை, பணம் மீட்பு ..!

கோவையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், 13 சவரன் நகை, பணம் மீட்கப்பட்ட நிலையில், திருட்டில் ஈடுபட்ட ஒருவர் சிக்கிய நிலையில், தப்பி ஓடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

NLC விவகாரம் - பொதுமக்கள் எதிர்ப்பு.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு

TVK Vijay: தவெக பொதுக்குழு கூட்டம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று..!

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படித்த படிப்புக்கு வேலை இல்லை.. தம்பியின் வாழ்க்கைக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட அண்ணன்..!

படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். தன்னால் தனது தம்பியின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என விபரீத முடிவை எடுத்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சாதிவாரி கணக்கெடுப்பு.. நாதக பேரணிக்கு அனுமதிக்கொடுத்து ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்..!

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு இனிவரும் காலங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்கான கட்டணத்தை  நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2025:பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி நிதி ஒதுக்கீடு..!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு 46 ஆயிரத்து 760 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் நலன் கருதி தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள்.. 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு..!

தமிழக பட்ஜெட்டில், திருக்குறள் மொழிபெயர்ப்பு, மேலும் 8 இடங்களில் அகழாய்வு உட்பட தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

இபிஎஸ்-க்கு எதிராக தயாநிதி மாறன் தாக்கல் செய்த வழக்கு.. இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

“செருப்புகள் ஜாக்கிரதை” காமெடி ஒரிஜினல் சீரிஸ் மார்ச் 28 முதல்..!

ZEE5 தளம் வழங்கும், அடுத்த அதிரடி காமெடி ஒரிஜினல் சீரிஸ், “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது !! 

TN Budget 2025: இதுல ஏதாவது செஞ்சாங்களா? அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்த Jayakumar

புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி

நாட்டிற்கே முன்னோடி திட்டம்.. அமைச்சர் சொன்ன தகவல்..

அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்த ரூ.500 கோடி ஒதுக்கீடு

எதிர்பாராத அறிவிப்பு !. அமைச்சர் படிக்க படிக்க அதிர்ந்த மேஜை

தமிழக பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கீடு

சட்டவிரோதமாக நிதி பெற்ற வழக்கு... ஜவாஹிருல்லா தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி பெற்றது தொடர்பான வழக்கில், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான அறிவிப்பு..

ரூ.120 கோடியில் 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை பட்ஜெட்டில் அறிவிப்பு

விஜய்யுடன் Y பிரிவு அதிகாரிகள் அர்ஜென்ட் மீட்டிங்..

தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது வீட்டிற்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது தொடர்பாக ஆலோசனை

கச்சத்தீவு செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு

கச்சத்தீவு புனித அந்தோனியர் திருவிழா கோலாகலம்

டாஸ்மாக் முறைகேடு -பாஜக போராட்டம் அறிவிப்பு

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து மார்ச் 17-ம் தேதி, தமிழக பாஜக சார்பில் போராட்டம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.

மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக நிர்வாகிகளோடு விஜய் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 19 கட்சி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை  அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.முன்னதாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

ரூபாய் குறியீடு மாற்றம்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலச்சினையில் 'ரூ' என்ற தமிழ்வார்த்தையை தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்தியிருக்கிறது. ரூபாய் குறியீட்டை மாற்றியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்.. ஆய்வு அறிக்கை வெளியீடு..!

பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.