K U M U D A M   N E W S

Author : Jagan

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 21-09-2024

இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பை இங்கே காணலாம்.

முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்.. படுதோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வக்ஃப் வாரியத்திற்கு புதிய தலைவர் தேர்வு.. உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவால் செய்ய முடியாது.. ஈகோவை மட்டும் திருப்திபடுத்தும் - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின்

பாஜகவால் ஒரே ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும் இது திசை திருப்பல் தந்திரம் தான் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஆசிரியர்களுக்கு எதற்கு இந்தி, சமஸ்கிருதம்?.. திணிப்பது அப்பட்டமாக தெரிகிறது.. சு.வெ. காட்டம்

S. Venkatesan About Hindi Sanskrit Language : தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை?.. விஜய்யின் மாஸ்டர் பிளான்.. அடுத்த கட்டத்திற்கு தயாரான த.வெ.க

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

கடனுக்காக வழிப்பறி கொள்ளையில் இறங்கிய போலீஸ்.. சிக்கிய அதிமுக நிர்வாகியின் மகன்

13 லட்ச ரூபாய் கடனுக்காக, ஹவாலா பணம் எடுத்து வருபவரை நோட்டமிட்டு நண்பனோடு சேர்ந்து வழிப்பறியில் ஈடுப்பட்ட முதல்நிலை காவலரையும், அதிமுக நிர்வாகியின் மகனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நடுத்தெருவுக்கு வந்த ஜி.பி.முத்து.. பூசாரியுடன் கீழ்த்தரமாக சண்டை போட்ட வீடியோ வைரல்

கோவில் பூசாரியுடன் ஜி.பி.முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி கைது.. கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் சென்ற சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.

வங்க புலியின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இந்தியா?.. வருண பகவான் வழிவிடுவாரா?

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மழைபொழிவால் ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் முன்னாள் அமைச்சர்.. ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை

536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Kakka Thoppu Balaji Encounter : காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் நடந்தது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Kakka Thoppu Balaji Encounter News Update : சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி என்று வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Gautam Gambhir : மற்றவர்களை மதிப்போம்.. யாருக்கும் பயப்பட மாட்டோம்.. கவுதம் கம்பீர் அதிரடி

Indian Cricket Team Head Coach Gautam Gambhir : நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அதே சமயம் மற்றவர்களின் திறமையை மதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதெப்படி அவர்கள் மதுவை ஒழிப்பார்கள்.. வேடிக்கையாக இருக்கிறது.. - வாசன்

மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது, வேடிக்கையாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இந்திராவுக்கு நேர்ந்த கதிதான் ராகுலுக்குமா? - பதறிய மு.க.ஸ்டாலின்.. பாஜவுக்கு கண்டனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடும் வகையில் பேசிய பாஜகவினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

அறக்கட்டளை நடத்துகிறார்.. சம்போ செந்தில்தான் காரணம்.. காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கதறல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் தனது மகன் பாலாஜியை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் - வடக்கு மண்டல இணை ஆணையர்ஆய்வு

Chennai Rowdy Kakkathoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர்ஆய்வு மேற்கொண்டார்.

Edappadi Palanisamy : அதை விஜய் சார் கிட்ட கேளுங்க - எடப்பாடி பழனிசாமி ஓபன் டாக்

Edappadi Palanisamy About Vijay : இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். விஜய் சாரிடம் கேளுங்கள் என்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Kakka Thoppu Balaji Encounter : ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் - சம்பவ இடத்தில் ஆய்வு

Rowdy Kakka Thoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

காக்கா தோப்பு பாலாஜியை காலி செய்த காக்கிகள்.. நடந்தது என்ன?

வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ

பிரபல ரவுடி சுட்டுக்கொலை..! என்கவுண்ட்டர் நடந்தது எப்படி?

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

''கலைஞரை வைத்துக்கொண்டே பேசினோம்'' - தமிழிசை விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி

கலைஞரை வைத்துக்கொண்டே ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து நாங்கள் பேசியுள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மது ஒழிப்பு மாநாடு – நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்திக்க முதலமைச்சர் திட்டம் - எப்போது அனுமதி?

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவிலும் நிபா வைரஸ்.. எல்லையில் தீவிர பரிசோதனையில் போலீசார்

நிபா வைரஸ் பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டதை அடுத்து, எல்லைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.