K U M U D A M   N E W S

Author : Jagan

மாவட்ட செய்திகள்: உங்கள் ஊர் செய்திகள் | 12-11-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

வகுப்பில் அதிகம் பேசிய பள்ளி மாணவர்கள்.. வாயில் டேப் ஒட்டிய ஆசிரியர்

ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவசரப்பட்ட திமுக கவுன்சிலர்.. படு வைரலாகும் வீடியோ - ஷாக்கில் மதுரை மக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்...! இபிஎஸ் அதிரடி ஆலோசனை

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேருந்துக்காக காத்திருந்த பெண்.. உருட்டுக் கட்டையால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு

சென்னை புரசைவாக்கம் பகுதியில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

"யாரும் கிட்ட வராதீங்க.." - கையில் குழந்தையுடன் தந்தை செய்த காரியம்

மங்களூரு அருகே குடும்பத் தகராறு காரணமாக சந்தீப் என்பவர் குழந்தையுடன் பாலத்தின் மீது ஏறி நின்று கீழே குதிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"நான் வரேன்.." - EPS-க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமியுடன் விவாதத்திற்கு தயார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈ.டி. ரெய்டால் பரபரப்பான சென்னை.. சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரால் அதிரடி

தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

குருவி ரூபத்தில் 8 பெண்கள்.. கற்பனைக்கு எட்டாத மாஸ்டர் பிளான் - அரண்டுப்போன அதிகாரிகள்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிமுக கள ஆய்வுக்குழு ஆலோசனை.. யாரெல்லாம் பங்கேற்றுள்ளார்கள்?

அதிமுக கள ஆய்வுக்குழுவினருடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

இனி இது வேண்டாம்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கமல்!

பட்டங்கள், அடைமொழி கொண்டு அழைக்க வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கார் குண்டுவெடிப்பு வழக்கு -வெளியானது அதி முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மெட்ரோ பயணிகளே ஜாக்கிரதை.!! நொடியில் தப்பித்த உயிர்.. குலை நடுங்க வைக்கும் காட்சி

சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் வளாகத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பள்ளியில் வாயு கசிவு சம்பவம்: மாணவர்கள் விஷம செயலா?.. போலீசார் விசாரணை

சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இரக்கம் காட்டி இறங்கிய தங்கம் விலை.. தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபணரத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தனியார் பள்ளியில் வாயுக் கசிவு.. போலீஸ் விசாரணையில் திருப்பம்

தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தனியார் நிறுவனத்தில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி

தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.. அமமுக நிர்வாகிகளால் பரபரப்பு

உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்ற நிலையில், உடன் சென்ற நிர்வாகி படுகாயம் அடைந்தார்.

11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் 6 பெண்கள் உட்பட 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

"விலைவாசி உயர்வும் போதும், திமுக ஆட்சியும் போதும்.." - முன்னாள் அமைச்சர் தாக்கு

தமிழ்நாட்டில் விலைவாசி, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என திமுக மக்கள் விரோத ஆட்சி நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடக்க வீரர்கள் சொதப்பல்.. வருண் சக்கரவர்த்தியின் 5 விக்கெட்டுகள் வீண்

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கோவையில் போலீஸ் கஞ்சா வேட்டை.. சிக்கிய கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிரடி.. பல்வேறு பகுதிகளில் ரெய்டு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

E-bike catches fire: திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சார்ஜ் ஏற்றிய போது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக் -திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக இணைவுக்கு தடைபோடும் ஆர்.பி.உதயகுமார்?.. ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.