டாஸ்மாக்கில் பணியாளர்கள் சஸ்பெண்ட்..? - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பாலிவுட் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஹேரா பெரி திரைப்படத்தில் நடித்த அக்ஷய் குமார், சுனில் செட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகிய மூவரும் மீண்டும் இணைகின்றனர்.
வருகின்ற 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் 'கங்குவா' திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து, விவசாய பணிக்குச் சென்ற 15 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த பெண்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் அருகே தனியார் மதுபான விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.
சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், மாநகராட்சி வாகனம் சிக்கியது. குப்பை அள்ளும் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பள்ளத்தில் வாகனத்தின் பின்பகுதி சிக்கியது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாமதமான அறிவிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா, இல்லையா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பியோடியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து பரவலாக மழைபெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு பெய்த கனமழையை அடுத்து, அதிகபட்சமாக நந்தனத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் சாலையில் கல்லூரி பெண்கள் முன் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை பிடித்து தலை முடியை வெட்ட வைத்த காவல்துறையினர் 4000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
கனமழை காரணமாக சென்னையில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் கிண்டி, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...