Soori: தனுஷ் இடத்துக்குப் போட்டியா... மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் சூரி... விரைவில் அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் சூரி ஒரு படத்தில் இணையவுள்ளதாக அவரே அப்டேட் கொடுத்துள்ளார்.

Aug 23, 2024 - 21:41
Aug 24, 2024 - 10:01
 0
Soori: தனுஷ் இடத்துக்குப் போட்டியா... மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் சூரி... விரைவில் அப்டேட்!
மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் சூரி

சென்னை: ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் முகம் காட்டத் தொடங்கிய சூரி, அதன் பின்னர் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தார். இப்போது ஹீரோ மெட்டீரியலாக மாஸ் காட்டி வரும் அவர், மீண்டும் வெற்றிமாறனுடன் இணையுள்ளது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. காமெடி கேரக்டர்களில் நடித்தாலும், சூரியால் அவ்வளவு எளிதாக ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. அவரது ஓரிரு காமெடி காட்சிகள் தவிர மற்றவை எதுவும் சொல்லிக்கொள்ளும் படி ரசிகர்களை சிரிக்க வைக்கவில்லை. 

இந்த நிலையில் தான் முதன்முறையாக ஹீரோ அவதாரம் எடுத்தார் சூரி. அதுவும் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் லீடிங் ரோலில் நடிக்க, அவருடன் விஜய் சேதுபதியும் வாத்தியார் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்தார். கடந்தாண்டு வெளியான இந்தப் படம் சூரியின் கேரியரையே தலைகீழாக மாற்றியது. போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசனாக நடிப்பில் மிரட்டிய சூரிக்கு, அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் வீடு தேடிச் சென்றன. அதன்படி, சில மாதங்களுக்கு முன்னர் கருடன், இப்போது கொட்டுக்காளி படங்கள் சூரிக்கு மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இதிலும் சூரி தான் லீடிங் ரோலில் நடித்துள்ளார். விடுதலை 2 வெளியானதும் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதனால் ரசிகர்கள் அனைவரும் வாடிவாசல் ஷூட்டிங் அப்டேட்டை எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தற்போது சூரி கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. அதாவது விடுதலை படத்தைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் இணையவுள்ளதாக சூரி தெரிவித்துள்ளார். இதுபற்றி விரைவில் மிகப் பெரிய அப்டேட் வெளியாகும் எனவும் சூரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க - விஜய்யின் கோட் ரன்னிங் டைம் அப்டேட் இதோ

வெற்றிமாறனின் ஃபேவரைட் ஹீரோ தனுஷ் மட்டுமே. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என 4 படங்களில் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் காம்போ எப்போது இணையும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். ஆனால், சூரியோ மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அப்டேட் கொடுத்து அசரடித்துள்ளார். இதனால் வெற்றிமாறனின் ஃபேவரைட் ஹீரோ லிஸ்ட்டில் இருந்த தனுஷ் இடத்தை, சூரி கெட்டியாக பிடித்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  

அதேநேரம் வெற்றிமாறன் இயக்கும் படத்தில், சூரி ஹீரோவாக நடிக்கிறாரா அல்லது அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளாரா என்றும் ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்துள்ளன. விரைவில் இந்தப் படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என சூரி கூறியுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow