KamalHassan: அமெரிக்காவில் தஞ்சம்... AI வெர்ஷனுக்கு மாறும் கமல்ஹாசன்... இனிமேல் தான் சம்பவமே!

உலக நாயகன் கமல்ஹாசன், ஏஐ வெர்ஷனுக்கு மாறவுள்ள தகவல் கோலிவுட்டில் தீயாகப் பரவி வருகிறது. இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 8, 2024 - 08:08
 0
KamalHassan: அமெரிக்காவில் தஞ்சம்... AI வெர்ஷனுக்கு மாறும் கமல்ஹாசன்... இனிமேல் தான் சம்பவமே!
கமல்ஹாசன்

சென்னை: களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், தற்போது இந்திய சினிமாவின் பெருமிதமாக வலம் வருகிறார். உலக நாயகன், கலைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவிற்கு, சினிமாவின் அத்தனை அவதாரங்களையும் கண்டவர் கமல்ஹாசனாக மட்டுமே இருக்க முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்திய சினிமாவில் சகலகலா வல்லவன் என்றால் அது கமல்ஹாசன் தான். புதிய கதைகளங்கள், விருமாண்டி போல திரைக்கதையில் வித்தியாசமான முயற்சிகள் இப்படி இன்னும் ஏராளமான சம்பவங்களை செய்துகொண்டே இருக்கிறார்.

திரையுலகில் கமல் செய்த சாதனைகளை அவ்வளவு எளிதாக பட்டியலிட்டுவிட முடியாது. கேமராவில் இருந்து காஸ்ட்யூம் வரை அனைத்திலும் புதிய புதிய டெக்னாலஜிகளை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்ததில் முதன்மையானவர் கமல். 69 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு சவல் விடும் வகையில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார். இந்தாண்டு கமல் நடிப்பில் இந்தியன் 2, கல்கி படங்கள் வெளியாகின. இதில் இந்தியன் 2 நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், கல்கி படத்தில் கமலின் வில்லத்தனத்தை பார்த்து ரசிகர்களே மிரண்டு விட்டனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் ஜானரில் கேங்ஸ்டர் மூவியாக உருவாகி வரும் தக் லைஃப், அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் அன்பறிவ் மாஸ்டர் இயக்கும் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். இன்னொரு பக்கம் அரசியலிலும் பிஸியாக வலம் வருகிறார். இதனிடையே திடீரென அமரிக்கா பறந்துள்ளார் கமல்ஹாசன். அங்குள்ள மிக முக்கியமான இன்ஸ்டியூட்டில் ஏஐ கோர்ஸ் படித்து வருகிறார்.

மேலும் படிக்க - கோட் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்!

Artificial Intelligence எனப்படும் ஏஐ குறித்து படிப்பதற்காகவே அமெரிக்கா சென்றுள்ள கமல், இதற்காக அங்கேயே 3 மாதங்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளாராம். அதேநேரம் 45 நாட்களில் இந்த படிப்பை முடித்துவிடவும் கமல் பிளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக அவர் சென்னை திரும்புவதாக இருந்தால், ஏற்கனவே கமிட்டான வேலைகளை முடித்துக் கொடுக்க மட்டுமே வரவுள்ளாராம். Artificial Intelligence எனப்படும் ஏஐ இப்போது சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி மறைந்த பாடகர்களின் குரலில் பாடல்களை உருவாக்க முடியும் என்பது தமிழ் சினிமாவில் சாத்தியமாகிவிட்டது. 

அதேபோல், விஜய்யின் கோட் படத்தில், மறைந்த கேப்டன் விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜியில் நடிக்க வைத்திருந்தார் வெங்கட் பிரபு. இந்த காட்சியில் வெங்கட் பிரபுவின் மேக்கிங் சரியில்லை என ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டாலும், விஜயகாந்தை பார்த்து தியேட்டரை தெறிக்க விடவும் செய்தனர். இந்நிலையில், அமெரிக்கா சென்று ஏஐ படித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன், அதன் மூலம் தமிழ் சினிமாவில் தரமான சம்பவங்களை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வயதிலும் சினிமாவுக்காக புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கும் கமல்ஹாசன், இளம் ஹீரோக்களுக்கும், இயக்குநர்களுக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow