ஜூனியர் NTR – பிரசாந்த் நீல் கூட்டணி... பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்... ரிலீஸ் தேதியும் கன்ஃபார்ம்!

அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார் பிரசாந்த் நீல்.

Aug 9, 2024 - 21:44
Aug 9, 2024 - 22:14
 0
ஜூனியர் NTR – பிரசாந்த் நீல் கூட்டணி... பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்... ரிலீஸ் தேதியும் கன்ஃபார்ம்!
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் புதிய படத்தின் பூஜை விழா

சென்னை: கேஜிஎஃப் திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார் இயக்குநர் பிரசாந்த் நீல். யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎஃப், இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் படத்துக்கு இந்தியா முழுவதும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. கேங்ஸ்டர் ஜானரில் மரண மாஸ் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்திருந்தார் பிரசாந்த் நீல். இதனால் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க டாப் ஹீரோக்கள் பலரும் ரெடியாக வெயிட்டிங்கில் உள்ளனர். 

கேஜிஎஃப்-ஐ தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படமும் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. கேஜிஎஃப் 3, சலார் 2 என பிரசாந்த் நீல் கைவசம் இரண்டு படங்கள் உள்ள நிலையில், டோலிவுட் ஹீரோ ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க கமிட்டாகியிருந்தார் பிரசாந்த் நீல். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படம் என்றும் சொல்லப்பட்டது. ஆர்.ஆர்.ஆர் வெற்றிக்குப் பின்னர் தேவாரா படத்தில் நடித்து வந்த ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதேநேரம், பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. 

இதனால் ஏகே ரசிகர்கள் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் போஸ்டரோடு பிரசாந்த் நீல் – அஜித் இணையும் படத்தின் அபிஸியல் அப்டேட்டுக்காக காத்திருந்தனர். ஆனால், அவர்களது ஆசையில் பெரிய பாறாங்கல்லை போட்டு சிதைத்துவிட்டார் பிரசாந்த் நீல். அதாவது ஏற்கனவே கமிட்டான படி ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க ரெடியாகிவிட்டார். அதன்படி, பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆர் இணையும் படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த பூஜை நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்த ஷெட்யூலில் வேகமாக நடைபெறவுள்ளதாம். மேலும், இந்தப் படம் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கேஜிஎஃப் அல்லது சலார் படங்களின் யூனிவர்ஸில் இணையாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத இந்தப் படத்தில், ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க - டாப் ஸ்டார் பிரசாந்துக்கு அந்தகன் கை கொடுத்ததா... ட்விட்டர் விமர்சனம் இதோ 

இவர்கள் தவிர என்டிஆர் 31 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்தும் இன்று அப்டேட் வெளியாகவில்லை. கேஜிஎஃப், சலார் வரிசையில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இத்திரைப்படம், பான் இந்தியா மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே அஜித் – பிரசாந்த் நீல் இடையே நடந்த பேச்சுவார்த்தை உண்மை தான் எனவும், என்டிஆர் நடிக்கும் படம் முடிந்ததும் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow