Dhanush: ரெட் கார்டு பஞ்சாயத்து ஓவர்... கூலாக டீல் பேசி முடித்த தனுஷ்... புது கூட்டணி ரெடி!

நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ரெடியாக இருந்தது. இந்த பஞ்சாயத்தை செம கூலாக டீல் பேசி முடித்துவிட்டாராம் தனுஷ்.

Sep 11, 2024 - 21:15
 0
Dhanush: ரெட் கார்டு பஞ்சாயத்து ஓவர்... கூலாக டீல் பேசி முடித்த தனுஷ்... புது கூட்டணி ரெடி!
தனுஷின் ரெட் கார்டு பஞ்சாயத்துக்கு தீர்வு

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தனுஷின் 50வது படமான ராயனை அவரே இயக்கியிருந்தார். எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ராயன் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராயன் வெற்றியை தொடர்ந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இன்னொரு பக்கம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

இதனிடையே நடிகர் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்ட் வழங்கியதாக கடந்த ஜூலை மாதம் தகவல்கள் வெளியாகின. பிரபல தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கிய தனுஷ், அந்தப் படங்களில் நடிக்காமல் அடுத்தடுத்து மற்ற தயாரிப்பாளர்களின் பேனரில் நடிக்க கமிட்டானதாக சொல்லப்பட்டது. அதாவது ஒரு பட நிறுவனத்தில் கமிட்டாகும் தனுஷ், அதற்காக அட்வான்ஸ் வாங்கிவிடுவார். ஆனால், அதில் நடிக்காமல் இழுத்தடிப்பதோடு, இன்னொரு தயாரிப்பு நிறுவனத்தின் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக புகார் எழுந்தது. 

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், தனுஷுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்தது. தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதாகவும், அவர் நடிக்கும் புதிய படங்களைத் தொடங்குவதற்கு முன், அதன் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், இதுகுறித்து நடிகர் சங்கத்துக்கு எதுவும் தெரியாது என நடிகர் கார்த்தி கூறியிருந்தார். இந்நிலையில், இந்த ரெட் கார்டு பஞ்சாயத்துக்கு தனுஷே முடிவு கட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    

அதன்படி, தனுஷ் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாராம். இதனால் இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல், பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை, வட்டியுடன் திரும்ப செலுத்தவும் தனுஷ் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுஷுக்கு வழங்கிய ரெட் கார்டை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க - பிக் பாஸ் புதிய ப்ரோமோ... மாஸ் காட்டும் விஜய் சேதுபதி!

இந்நிலையில், தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் தனுஷ். இந்த வரிசையில் மேலும் ஒரு படம் இயக்கவுள்ள தனுஷ், அதில் அருண் விஜய்யை ஹீரோவாக கமிட் செய்துள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், இந்தப் படம் பற்றியும் சீக்கிரம் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow