Actor Vikram Thangalaan Movie Audio Launch Date : பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து சீயான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சீயான் விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பா ரஞ்சித் - ஜிவி பிரகாஷ் குமார் கூட்டணிக்கும் தங்கலான் தான் முதல் படம். முன்னதாக தங்கலான் படத்தை ஆஸ்கர் விருது வரை கொண்டு செல்வோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். அதன்படி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் தரமாக தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
கடந்த மாதம் தங்கலான் ட்ரெய்லரும், அதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலும் வெளியானது. இந்த வரிசையில் தங்கலான் இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல், தங்கலான் இசை வெளியீட்டு விழா பற்றிய அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தங்கலான் ஆடியோ லான்ச் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது. ஆனால், இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்து படக்குழு அறிவிக்கவில்லை.
இசை வெளியீட்டு விழா தான் தங்கலான் படத்தின் முதல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது. அதனையடுத்து 6ம் தேதி பெங்களூர் செல்லும் படக்குழு, அங்கு ரசிகர்களையும் செய்தியாளர்களையும் சந்திக்கவுள்ளது. அதன்பின்னர் 7ம் தேதி மும்பையில் நடைபெறும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தங்கலான் படக்குழு பங்கேற்கவுள்ளது. இறுதியாக ஆகஸ்ட் 9ம் தேதி கொச்சியிலும் தங்கலான் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்
இந்த நிகழ்ச்சிகளில், சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனால் இனி தங்கலான் ப்ரோமோஷன்ஸ் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கோட் படத்தின் மூன்றாவது பாடல் 3ம் தேதி வெளியாகிறது. இதற்கான அபிஸியல் அப்டேட் வெளியான சிறிது நேரத்திலேயே, தங்கலான் அப்டேட்டும் வெளியாகியுள்ளது சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
தங்கலான் 2வது பாடல் நாளை வெளியாகிறது; இசை வெளியீட்டு விழா ஆக.5ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவிப்பு#Kumudamnews | #kumudam | #Kumudamnews24x7 #ThangalaanAudioLaunch #Thangalaan #SecondSingle #ThangalaanFromAug15 @Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe #StudioGreen… pic.twitter.com/SNjpRF7l4a
— KumudamNews (@kumudamNews24x7) August 1, 2024
தங்கலானை தொடர்ந்து வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் சீயான் விக்ரம். சு அருண்குமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படம், சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு பக்கா ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்கலான் படத்தில் சீயானின் வெரைட்டியான ஆக்டிங் மிரட்டலாக வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், வீர தீர சூரனில் விக்ரமின் இன்னொரு வெர்ஷனை பார்க்கலாம் என கூறப்படுகிறது.