ஃபெஞ்சல் புயல்... காற்றின் வேகம் குறைந்தது
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.
சென்னைக்கு தென் கிழக்கே 190 கி.மீ தொலைவில் இருக்கும், ஃபெஞ்சல் புயல் நாகையில் இருந்து 210 கி.மீ புதுச்சேரியில் இருந்து 180 கி.மி தொலைவில் மையம் கொண்ட புயல் புதுச்சேரியின் காரைக்கால், மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நகரும் ஃபெஞ்சல் புயலின் வேகம் படிப்படியாக குறைந்த நிலையில், ஃபெஞ்சல்’ புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில், மணிக்கு 15 கி.மீட்டரிலிருந்து 12 கி.மீ ஆக குறைந்த நிலையில், தற்போது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 90 கி.மீ வேகத்திலும், பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் ஒவ்வொரு குழுவிலும் 30 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
ஃபெஞ்சல் புயலானது, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அங்கங்கே வைக்கப்பட்டுள்ள ராட்ச பம்புகள் மூலமாக மழைநீர் உடனுக்குடன் அகற்றி வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
புயலினால், தற்போது வரை 13 அடி வரை கடல் அலை எழுந்து கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?