தமிழ்நாடு

போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி..தலைமறைவாக இருந்த வணிகவரித்துறை அதிகாரி கைது..!

போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி கொள்ளை விவகாரத்தில் தலைமறைவாக இருந்து கைதான வணிகவரித்துறை அதிகாரி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வணிக வரித்துறை அதிகாரியை போலீசார் விடுவித்தனர்.

போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி..தலைமறைவாக இருந்த வணிகவரித்துறை அதிகாரி கைது..!
போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி..தலைமறைவாக இருந்த வணிகவரித்துறை அதிகாரி கைது..!

சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி 20 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்த முகமது கவுஸ் என்கிற தனியார் நிறுவன ஊழியரை திருவல்லிக்கேணி உதவி காவல் ஆய்வாளர் ராஜா சிங் என்பவர் வழிமறித்து முகமது கவுஸ் 20 லட்சம்  பணம் வத்திருப்பதை கண்டுபிடித்து அதற்கான ரசீதை காண்பிக்கும் படி கூறிய நிலையில் பணத்திற்கான ரசீது இல்லாததால்  வருமான வரி துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு, ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

தனியார் நிறுவன ஊழியரான முகமது  கௌசை  காரில் ஏற்றிக்கொண்டு சென்னை எழும்பூர் வரை கடத்திச் சென்று பின்பு அவர் வைத்திருந்த பணத்திற்கான எந்தவித ரசிதும்  இல்லாததால் அவை ஹவாலா பணம் எனக் கூறி மிரட்டியுள்ளனர். பின்னர்,  அவர் வைத்திருந்த ரூபாய் 20 லட்சத்தில் 15 லட்சத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள 5 லட்சம் பணத்தை முகமது கௌஷிடம் கொடுத்து விட்டு வழிப்பறி செய்து தப்பி சென்றனர்.

இந்த விவகாரத்தில் முகமது கவுஸ் கொடுத்த புகாரின் அடிபடையில் திருவல்லிக்கேணி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரி துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு என நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அப்போது இதற்கு மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பது  தெரியவந்ததை அடுத்து அவரையும் போலீசார் தனிப்படை அமைத்து வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங், சைதாப்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சன்னிலாயடு வருமானவரித்துறை அதிகாரியான தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோரை விசாரணை செய்த பொழுது இவர்கள் ஏற்கனவே இது போன்று வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட விவகாரம் விசாரணையில் தெரியவந்தது. 

அது சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர்  ஆயிரம் விளக்கு பகுதியில் 40 லட்சம் ரூபாய் கொண்டு வந்ததை ஹவாலா  பணம் என கூறி 20 லட்சத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்திருந்தனர். 

இந்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் சைதாப்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சன்னி லாயுடு வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு மற்றும் வணிகவரி துறை அதிகாரிகளான சுரேஷ், பாபு, சதீஷ் என எட்டு பேர் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்களான ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு என ஐந்து பேர் ஏற்கனவே திருவல்லிக்கேணி வழிப்பறி  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வணிகவரித்துறை அதிகாரிகளான சுரேஷ் மற்றும் பாபு ஆகிய இருவரை ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் சுரேஷை போலீசார் கைது செய்தனர். பாபுவை விசாரித்து எழுதி வாங்கி போலீசார் அனுப்பி வைத்தனர். 

விசாரணை கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜானகிராமின் என்ற மற்றொரு வணிகவரித்துறை அதிகாரியும் போலீசாரிடம் சிக்கினார் மேலும் அவரது ஓட்டுநர் அப்துல்லாவை போலீசார் தேடி வருகின்றனர். குறிப்பாக கைது செய்யப்பட்ட ஜானகிராமன் வழிப்பறியில் ஈடுபட்ட காவலர்களுக்கும் பணத்தை இழந்த அவர்களுக்கும் இடையே தரகர் போல் இருந்து பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி நாடகமாடுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைதான சுரேஷ், ஜானகிராமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

குறிப்பாக அச்சப்பட்டு தாமதமாக வரும் புகார்தாரர்களை சமாதானம் பேசுவதாக கூறி கொள்ளையடித்த பணத்தில் பெரும் பங்கு காவலர்களுக்கும் சிறிய பங்கு பணத்தை இழந்தவர்களும் வாங்கிக் கொண்டு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முக்கியமாக இந்த வணிகவரித்துறை அதிகாரி ஜானகிராமன் செயல்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறை வருமான வரித்துறை வணிகவரித்துறை என அதிகாரிகள் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்து கொள்ளையடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதில் மேலும் சிலர் கைதாகலாம் என  பார்க்கப்படுகிறது.