தமிழ்நாடு

கடலூரில் 2 நாட்கள் முதலமைச்சர் கள ஆய்வு..  நெய்வேலியில் ரோட் ஷோ

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபடுகிறார்.

கடலூரில் 2 நாட்கள் முதலமைச்சர் கள ஆய்வு..  நெய்வேலியில் ரோட் ஷோ

நாளை காலை  சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக கடலூர் புறப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மாலை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.

இதை தொடர்ந்து கடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  நெய்வேலி பகுதியில் ரோட் ஷோ வில் மக்கள் மத்தியில் நடந்துசென்று மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார்.

இதன் பிறகு நெய்வேலியில் நடைபெறும்  நிகழ்சியில் 5000 மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

இதனை தொடர்ந்து இரவு நெய்வேலியில் தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறுநாள் காலை நெய்வேலியில் இருந்து புறப்பட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் சென்று அங்கு நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கழக  சார்பில் நடைபெறும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்சியில் கலந்து கொள்கிறார்.  இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 22 ஆம் தேதி மதியம் கடலூரில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சென்னை வருகிறார். 

இந்த இரண்டு நாள் கள ஆய்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் மக்கள் மத்தியில்  நடந்து சென்ற (road  show ) வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். 

அதேபோல இந்த இரண்டு நாள் ஆய்வில் அரசு திட்டங்கள் பொதுமக்களை சரியாக சென்று சேருகிறது என்பது கண்டறிய திடீர் ஆய்வு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டுள்ளார்.