போலீசில் புகார் அளித்த வீட்டு உரிமையாளர்.. ரூ.5 கோடி கேட்டு யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ்!

''இந்த பொய் புகார் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் யுவன் சங்கர் ராஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்'' என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

Aug 18, 2024 - 16:59
Aug 18, 2024 - 17:02
 0
போலீசில் புகார் அளித்த வீட்டு உரிமையாளர்.. ரூ.5 கோடி கேட்டு யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ்!
Yuvan Shankar Raja Notice

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கி வரும் யுவன் சங்கர் ராஜா மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஃபஷீலத்துல் ஜமீலா என்பவர் பரபரப்பு புகார் கொடுத்தார். அவர் போலீசில் கொடுத்த புகார் மனுவில், ''இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 'U1 records' ஸ்டுடியோவை எனக்கு சொந்தமான இடத்தில் வைத்துள்ளார். 

ஆனால் அவர் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார். இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் அவர் வாடகை பணத்தை செலுத்தவில்லை.

நான் துபாயில் இருக்கிறேன். வாடகை பணம் செலுத்தாதது குறித்து துபாயில் இருந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு எனது கணவர் போன் செய்தபோது அவர் பதில் அளிக்கவில்லை. மேலும் எங்களிடம் தெரிவிக்காமல் ஸ்டுடியோவை காலி செய்யும் யுவன் சங்கர் ராஜா, பீல்டிங்கின் கட்டமைப்பையும் சேதப்படுத்தியுள்ளார். ஆகவே யுவன் சங்கர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், வீட்டு உரிமையாளர் ஃபஷீலத்துல் ஜமீலா தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பொய் புகார் கொடுத்துள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். மேலும் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு  ஹஜ்மத் பேகமுக்கு தனது வழக்கறிஞர் மூலமாக யுவன் ஷங்கர் ராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-

இசையமைப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ள யுவன் சங்கர் ராஜா அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக உள்ளார். 1996ம் ஆண்டு தனது இசை பயணத்தை ஆரம்பித்த யுவன் சங்கர் ராஜா, இதுவரை 195 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கடந்த 28 ஆண்டுகளாக இந்திய திரையுலகில் வெற்றிகரமான நபராக விளங்கி வருகிறார்.

மேலும் யுவன் சங்கர் ராஜா கடந்த 2015ம் ஆண்டு 'U1 records' என்ற ஸ்டுடியோவையம், 'YSR FILMS' என்ற பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இவர் சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் 6வது கிராஸ் தெருவில் ஸ்டுடியோவை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஃபஷீலத்துல் ஜமீலா என்பவர், 'யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோ வாடகை பணத்தை கொடுக்கவில்லை' என்று போலீசில் புகார் அளித்த செய்தியை பார்த்து யுவன் சங்கர் ராஜா அதிர்ச்சி அடைந்தார்.

யுவன் சங்கர் ராஜா மீது ஃபஷீலத்துல் ஜமீலா கொடுத்துள்ள பொய் புகார் செய்திகளிலும், டிவி சேனல்கள் வாயிலாகவும் வெளியாகி இருக்கிறது. இதை பல ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். மேலும் இந்த பொய் புகார் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் யுவன் சங்கர் ராஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

ஃபஷீலத்துல் ஜமீலா கொடுத்த பொய் புகார் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளஙகளில் வெளியாகி உள்ளது. இந்த பொய் புகார் யுவன் சங்கர் ராஜாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. ஃபஷீலத்துல் ஜமீலா கொடுத்த பொய் புகாரை யுவன் சங்கர் ராஜா சட்டப்படி சந்திப்பார். யுவன் சங்கர் ராஜாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் புகார் அளித்த ஃபஷீலத்துல் ஜமீலா ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow