சென்னை: சில தினங்களுக்கு முன்னர் யூடியூப் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரியாணி மேன் என்ற அபிஷேக் ரபி. பிரியாணி மேன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரபி, பப்ளிச்சிட்டி இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதனால், ஏற்கனவே யூடியூபில் டிரெண்டிங்கான ஃபுட் ரிவீவ்ஸ் இர்பானையும் டெய்லர் அக்கா என்பவரையும் வம்பிழுத்து ட்ரெண்டானார். முக்கியமாக இர்ஃபானை டார்க்கெட் செய்து பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதேபோல் பிரியாணி மேன் வெளியிட்ட Dark வீடியோக்கள் என்ற abusive- கண்டெண்டுகளும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
டெய்லர் அக்கா வெளியிடும் ப்ளவுஸ் வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாக பேசி வந்த அவர், ஒருகட்டத்தில் சென்னை செம்மொழி பூங்காவிற்கு செல்லும் பெண்கள் பற்றியும் அநாகரிகமாக பேசியிருந்தார். அதாவது திருமணம் செய்வதே வேலை பார்க்கத்தான், செம்மொழி பூங்கா என்பது பாலியல் தொழில் செய்யும் இடம் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருந்தார். இதனையடுத்து பெண் ஒருவர் கொடுத்த வழக்கில் பிரியாணி மேனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாற்று மதத்தை இழிவுபடுத்தியதாக மீண்டும் பிரியாணி மேன் கைதாகியுள்ளார்.
சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், பிலிப் நெல்சன் லியோ என்பவர் சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். அதில், இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொண்டிருந்த போது, thebiriyaniman என்ற ID யில் யூடியூபர் அபிஷேக் ரபி என்பவரின் வீடியோவை பார்த்தேன். அவர், கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் நடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், மற்ற மதத்தினரிடையே பகை, பயம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் படிக்க - ராசியில்லாத நடிகை..? பிரியா பவானி சங்கர் கூல் ரிப்ளே!
இதனால் தனக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டதாகவும், எனவே கிறிஸ்தவ மதத்தைப் பற்றி இழிவுபடுத்தி வீடியோ வெளியிடும் Youtuber அபிஷேக் ரபி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிலிப் நெல்சன் லியோ தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பிரியாணி மேனின் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல், குற்றவாளி பயன்படுத்திய வலைதளங்களின் விபரங்கள் பெறப்பட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிரியாணி மேன் என்ற அபிஷேக் ரபியை சைபர் கிரைம் போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.