பேருந்துக்காக காத்திருந்த பெண்.. உருட்டுக் கட்டையால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு
சென்னை புரசைவாக்கம் பகுதியில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் பேருந்து நிலையத்தில், அயனாவரம் செல்வதற்காக காத்திருந்த மைதிலி என்பவர் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் உருட்டுக்கட்டையோடு வந்து செல்போனை தந்து விட்டு ஓடி விடு என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பயந்து போன அந்த பெண் கூச்சலிட்டதால் அருகில் இருந்த போக்குவரத்து காவலர் வந்துவிட்டார். அந்த இளைஞரிடம் உருட்டுக் கட்டையை கைப்பற்றி விட்டு சாலையோரமாக உட்கார வைத்து ஆறுதல் கூறியுள்ளனர்.
பதற்றத்தோடு மைதிலி கூறுகையில், "எனது கணவருக்கு போன் பேசி கொண்டிருந்த போது உருட்டைக் கட்டையால் தன்னை தாக்க வந்ததோடு செல்போன் கீழே வைத்து விடு என மிரட்டினார். என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து நடுங்கினேன். நான் தான் முதலமைச்சர் என கூறிக் கொண்டே இருந்தான். அவன் யார் என்பது தெரியவில்லை. செல்போனை பறிக்க முயன்றான்" என்று கூறியுள்ளார்.
இதனை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை தாக்க முயன்றனர். தகவல் அறிந்து வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் ஜெயசீலன் என்பதும் மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இவர் சென்னை வந்து நேற்று அண்ணா அறிவாலயத்திற்கு சென்றதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை சந்திக்க சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக வளர்ச்சிக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்க சென்றதாகவும் ஆனால் யாரையும் சந்திக்க முடியாததால், இங்கு வந்ததாகவும் இளைஞர் ஜெயசீலன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?