வெளியானது நயன்-விக்கி ஆவணப்படம்.. தனுஷ் என்ன செய்யப் போகிறார்?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நானும் ரவுடிதான் திரைப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பரபரப்பு நிலவி வருகிறது.
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அந்த மூன்று வினாடி வீடியோவை ட்ரெய்லரில் பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்த நிலையில் அந்த மூன்று வினாடி வீடியோவை தனது திருமண ஆவண படத்தில் பயன்படுத்தியுள்ளார் நடிகை நயன்தாரா!
நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை காதல் திருமணம் ஆகியவற்றை தழுவி உருவாகி இருக்கும் ஆவண படத்தின் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கானசிறப்பு காட்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபிள் திரையிடப்பட்டது.
முழுக்க முழுக்க நயன்தாராவின் திரை பயணத்தையும், காதல் திருமணத்தையும் மையப்படுத்தி உருவான இப்படம் நாளை நவம்பர் 18ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த ஆவணப் படத்தில் நயன்தாராவின் சினிமாவின் ஆரம்பகட்டம் மற்றும் அவரின் நடித்த முக்கிய படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்தி இருந்த நிலையில் நயன்தாராவும் விக்கியும் காதல் வயப்பட்ட நானும் ரவுடிதான் திரைப்படம் இந்த ஆவணப்படத்தில் ஒரு முக்கிய அம்சமாகவே அமைந்துவிட்டது.
இந்த நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பயன்படுத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தனுஷ் தரப்பில் இருந்து சில காட்சிகளையும் பாடல்களையும் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் நாளை வெளியாகும் இந்த ஆவண படத்திற்கு இதுவரை தனுஷ் தரப்பு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து ட்ரெய்லரில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மூன்று வினாடி வீடியோவை ஆவணப்பட டிரெய்லரில் பட குழு பயன்படுத்தி இருந்தது. இந்த மூன்று வினாடி காட்சிகளுக்கு நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று வினாடி காட்சிகளுக்கு 10 கோடி ரூபாய் நஷ்டம் கேட்ட தனுஷின் இந்த செயல் நயன்தாராவை பொறுமையிழக்க செய்த நிலையில், இதன் காரணமாகத்தான் நடிகை நயன்தாரா நடிகர் தனுஷின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூன்று பக்க அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகர் தனுஷ் பேசிய மேடை பேச்சுக்களை பகிர்ந்து வாழு வாழ விடு என்ற பதிவையும், எந்த மூன்று வினாடி காட்சிகளுக்கு நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டாரோ அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நயன்தாராவின் கடிதம் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியும்தான் நேற்று சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
நயன்தாராவின் திருமண ஆவணப்படம் 1 மணி நேரம் 22 நிமிடங்களாக நாளை வெளியாகும் நிலையில், தனுஷ் தரப்பில் இருந்து காப்புரிமை கேட்கப்பட்ட அந்த காட்சிகள் இதுவரை நீக்கப்படாமல் இருக்கிறது. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளும் இசையும் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.
அதேபோல் அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட வேறு சில மேக்கிங் காட்சிகளும் ஆவணப்படத்தில் இடம் பெற்று இருக்கிறது. இந்த காட்சி அமைப்போடு நாளை ஓடிடி தளத்தில் இந்த ஆவணப்படமானது வெளியானால், தனுஷ் தரப்பில் இருந்து என்ன கேள்வி எழுப்பப்படும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மேலும், இந்த ஆவணப்படுத்தில் மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு, பாசில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ராணா ராதிகா சரத்குமார் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் மற்றும் அட்லி , நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் பூ பார்வதி, தமன்னா, மற்றும் பின்னணி குரலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் ஆவணப்படத்தில் பங்கு பெற்று நடிகை நயன்தாராவை பற்றி பேசினர். நயன்தாராவின் சினிமாவின் ஆரம்ப காலகட்ட முதல் அவர்களுடைய இரண்டு குழந்தைகளுடன் இந்த ஆவண திரைப்படம் நிறைவடைந்துள்ளது.
What's Your Reaction?