மீண்டும் மீண்டுமா..? நாதகவில் இருந்து தொடர்ந்து விலகி வரும் தொண்டர்கள்.. கலக்கத்தில் சீமான்
நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலைமையில் விவசாய அணி இளைஞர் பாசறை மற்றும் மோகனூர் நகர செயலாளர், மகளிர் பாசறை செயலாளர் உள்ளிட்ட 50 பேர் கட்சியின் கொள்கை முரண்பாடு காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளரும் வழக்கறிஞருமான வினோத்குமார் நாமக்கல்லில் இன்று (நவ.28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்காக பணம் செலவழித்து கூட்டங்களை கூட்டினோம். கட்சிக்காக பல லட்சங்கள் செலவழித்தோம். கட்சியில் எங்களுக்கு மரியாதை இல்லை.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நோக்கமே மதச்சார்பின்மை தான். தற்போது சீமான் மதவாதத்தை ஆதரிக்கும் போக்கில் நடிகர் ரஜினியை சந்தித்த பிறகு பேசி வருகிறார். இது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீமானை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதனால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம் எனவே அக்கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்து உள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் கட்சியிலிருது விலகிவருகின்றனர். கடந்த வாரம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் முரணான பேச்சுகளால் பொறுப்பாளர்கள் 20-வது பேர் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
மேலும், சீமான் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் கொங்கு மண்டலத்தில் தங்களால் அரசியல் செய்யய முடியவில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளாக களத்தில் இருக்கும் தங்களை மக்கள் அந்நியமாகவே பார்க்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
What's Your Reaction?