Ajith: விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்… கோட் படத்தில் அஜித்..? வெங்கட் பிரபு ஷேர் பண்ண போட்டோ!

அஜர்பைஜானில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

Jul 11, 2024 - 04:38
 0
Ajith: விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்… கோட் படத்தில் அஜித்..? வெங்கட் பிரபு ஷேர் பண்ண போட்டோ!
Ajith and Venkat Prabhu

சென்னை: விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில், மோகன், பிரசாந்த், பிரபுதேவா என பெரும் பட்டாளமே நடித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் மறைந்த கேப்டன் விஜயகாந்தை ஏஐ மூலம் ஸ்க்ரீனில் கொண்டு வர முடிவு செய்துள்ளாராம் வெங்கட் பிரபு.

இத்தனை சர்ப்ரைஸ்களோடு உருவாகி வரும் தி கோட் படத்தை பார்க்க ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் வெங்கட் பிரபு ஷேர் செய்துள்ள ஒரு போட்டோவால், சோஷியல் மீடியாவே ஸ்தம்பித்து போய் நிற்கிறது. தி கோட் படப்பிடிப்பிற்காக வெங்கட் பிரபு & டீம் அஜர்பைஜான் சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கு அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு, இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவையும் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். 

அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதையும் வெங்கட் பிரபு மென்ஷன் செய்துள்ளார். வெங்கட் பிரபுவின் தோளில் அஜித் கை போட்டபடி ஸ்டைலாக போஸ் கொடுக்க, வெங்கியும் க்யூட்டாக ரியாக்ட் செய்துள்ளார். இந்த ஒரு போட்டோவை வைத்து அஜித், விஜய் ரசிகர்களுக்கு பல மில்லியன் கேள்விகள் எழுந்துள்ளன. அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானில் தான் நடைபெற்று வருகிறது.

இப்போது விஜய்யின் தி கோட் பட ஷூட்டிங்கையும் அதே லொக்கேஷனில் படமாக்கவுள்ளார் வெங்கட் பிரபு. அதற்காக அஜர்பைஜான் சென்றிருந்த போது தான் அஜித்தை சந்தித்திருக்கலாம் எனத் தெரிகிறது. அல்லது தி கோட் படத்தில் அஜித்தை கேமியோவாக நடிக்க வைக்கலாம் என அவரை சந்தித்து பேசியிருக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மங்காத்தாவில், அர்ஜுன் கேரக்டரில் நானே நடித்திருப்பேன் என படம் வெளியான பின்னர் விஜய் கூறியிருந்தார்.

அப்போதே விஜய்யும் அஜித்தும் இனிமேல் இணைந்து நடித்தால், அந்தப் படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குவார் என ஒரு டாக் இருந்த்து. அதுமட்டுமா என்ன?, தி கோட் படத்திற்காக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்த நாள் முதல், இதில் அஜித்தும் நடிப்பாரா என கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. அதற்கெல்லாம் விடையாக அஜித்தும் வெங்கட் பிரபுவும் எடுத்துக்கொண்ட இந்த போட்டோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் மங்காத்தா 2ம் பாகத்திற்கான டிஸ்கஷனா என்றும் ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்துள்ளன.

இதுபற்றிய உண்மைகள் அஜித், வெங்கட் பிரபு இருவருக்கு மட்டுமே தெரியும். அதேநேரம் அஜர்பைஜானில் உள்ள அஜித்தை, விஜய்யும் சந்தித்தாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கும் வெங்கட் பிரபுவே ஒரு அப்டேட் கொடுத்துவிட்டால் நல்லதாக இருக்கும். இப்படி பல யூகங்களுடன் விஜய்யின் அன்புத் தம்பிகளும், அஜித்தின் ரசிகர்களும் நல்ல செய்திக்காக காத்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் இதெல்லாம் கேஷுவலாக எடுத்துக்கொண்ட போட்டோ, இந்த சந்திப்பும் எதிர்பாராத ஒன்று தான் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow