விஜய் சேதுபதியின் மகாராஜா ஓடிடி ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்... எப்போ, எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா?

விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Jul 8, 2024 - 12:42
 0
விஜய் சேதுபதியின் மகாராஜா ஓடிடி ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்... எப்போ, எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா?
மகாராஜா ஓடிடி ரிலீஸ்

சென்னை: விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இத்திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டியது. சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமாகி ஹீரோ அவதாரம் எடுத்தவர் விஜய் சேதுபதி. பீட்ஸா, சூது கவ்வும், சேதுபதி என ஹீரோவாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள விஜய் சேதுபதி, விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் வில்லனாகவும் மிரட்டியிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் பெரியளவில் வெற்றிப் பெறவில்லை. அதேநேரம் ஜவான் ரிலீஸுக்குப் பின்னர் இனி வில்லன் கேரக்டர்களில் நடிக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்திருந்தார் விஜய் சேதுபதி. இத்தனை களேபரங்களுக்கு தான் சைலண்டாக உருவானது மகாராஜா. நித்திலன் சாமிநாதனின் முதல் படமான குரங்கு பொம்மை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனால் மகாராஜா படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பின்னர் மகாராஜா மாஸ் மகாராஜாவாக பட்டையை கிளப்பியது. தனது 50வது படத்தில் விஜய் சேதுபதி இப்படி தாறுமாறாக கம்பேக் கொடுப்பார் என ரசிகர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.

பிரபாஸின் கல்கி ரிலீஸுக்குப் பின்னரும் மகாராஜா படத்துக்கு திரையரங்குகளில் வரவேற்பு காணப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி விஜய் சேதுபதியின் மகாராஜா வரும் 12ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் வெளியாவதால், ஓடிடியிலும் மகாராஜா மகத்தான சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தியேட்டர் சென்று மகாராஜா படம் பார்க்க முடியாத ரசிகர்கள், ஓடிடி ரிலீஸுக்காக காத்திருந்தனர். அவர்களுக்கு இந்த அப்டேட் சூப்பரான ட்ரீட்டாக அமைந்துள்ளது. 

விஜய் சேதுபதியுடன் அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி, இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, சிங்கம் புலி, ‘பாய்ஸ்’ மணிகண்டன், அருள்தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான தமிழ்ப் படங்களில் திரைக்கதையில் மிரட்டிய ஒன்றாக மகாராஜா அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். திரைக்கதையில் குப்பை தொட்டியை மெயின் கேரக்டர் போல கொண்டுவந்து, அதன் பின்னணியில் செம எமோஷனலாக கதை கூறியிருந்தார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். இதுவே மகாராஜா படத்தின் வெற்றிக்கு காரணம் எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow