The GOAT Movie Trailer Release Date : இதோ ’கோட்’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. தயாரான தளபதி ரசிகர்கள்..

The GOAT Movie Trailer Release Date : விஜய் நடிப்பில் தயாராகியுள்ள கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Aug 16, 2024 - 03:28
Aug 16, 2024 - 22:02
 0
The GOAT Movie Trailer Release Date : இதோ ’கோட்’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. தயாரான தளபதி ரசிகர்கள்..
The GOAT Movie Trailer Release Date

The GOAT Movie Trailer Release Date : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதேபோல், இப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் த்ரிஷா நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அப்டேட்டையும் படக்குழு தரப்பில் இருந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில், கோட் படத்தின் ரிலீஸ் தேதியை (Goat Movie Trailer Release Date) நேற்று [ஆகஸ்ட் 14] அறிவிப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், நேற்று இரவு வரையும் கோட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. முன்னதாக கோட் படத்தில் இருந்து புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் அர்ச்சனா கல்பாத்தி.

அதில், ஆகஸ்ட் 14ஆம் தேதி கண்டிப்பாக கோட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். அதனை சிறப்பாக கொடுக்க வேண்டும் என நாங்கள் அனைவரும் வேலை பார்த்து வருகிறோம். அதற்கு முன்பாக இந்த போஸ்டரை உங்களுக்கு ட்ரீட்டாக வெளியிடுகிறோம் எனக் கூறியிருந்தார்.

இதனிடையே அர்ச்சனா கல்பாத்தி ஷேர் செய்திருந்த போஸ்டரில், விஜய் இரண்டு கெட்டப்புகளில் மிரட்ட, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதுவரை விஜய்யின் போஸ்டரும், விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இருக்கும் போஸ்டர்களும் மட்டுமே வெளியாகின.

முதன்முறையாக கோட் படத்தில் நடிக்கும் அனைவரையும் ஒரே போஸ்டரில் இருக்கும்படி வெளியிட்டுள்ளது. முக்கியமாக இந்த புதிய போஸ்டரில் மைக் மோகனின் லுக் ரொம்பவே வித்தியாசமாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதில், ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உற்சாகமான ரசிகர்கள் கோட் திரைப்படத்தின் அப்டேட்டை, சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். விரைவில் வெளியாகிறது என்பதால், விஜய் ரசிகர்களும் ஏக குஷியில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow