கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்பு காரணம் என்று உறவிகள் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (31) நேற்று கலைஞர் நூற்றாண்டு உயற்சிறப்பு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி தற்பொழுது உயிரிழந்து உள்ளார்.
விக்னேஷ் உயிரிழந்ததற்கு மருத்துவர்கள் மருத்துவர்கள் இல்லாததுதான் காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் தற்பொழுது மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விக்னேஷ் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனையில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் விக்னேஷுக்கு பித்தப்பை கல் பிரச்சினை இருந்தது தெரிய வந்ததுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க முடியாமல் கிண்டி அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகம் தொடர்ந்து பரப்பாக காணப்படுகிறது.
கடந்த 13 ஆம் தேதி கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர், அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக, அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.