தமிழ்நாடு

ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்..காரணம் என்ன?

கனமழை எதிரொலியால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரத்தான ரயில்கள் ஆவடியில் இயக்கப்பட்டதால் ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.

ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்..காரணம் என்ன?

கனமழை எதிரொலியால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரத்தான ரயில்கள் ஆவடியில் இயக்கப்பட்டதால் ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக, பேசின் பிரிட்ஜ், வியாசர் பாடி பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், நீலகிரி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சில ரயில்கள், ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஆவடி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்ததால் நிற்க கூட இடம் இல்லாமல் அவதியடைந்தனர். மேலும், போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநாகராட்சியும், தமிழக அரசும் செய்து வருகிறது. அதன்படி பேரிடர் மீட்பு படையினர், படகுகள், மோட்டார் பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டு அறையில் ஊழியர்கள் போதிய அளவிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை வானிலை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை தொடங்கும் இயல்பு தேதி அக்டோபர் 20 என்றார். தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் 2 நிகழ்வுகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், தென்மேற்கு பருவமழை இன்று பல இடங்களில் விலகி உள்ளது.  

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.  இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளை கடந்து, நாளை அதிகாலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.