"சிறையில் சாதி? - மாநில அரசே பொறுப்பு"
சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
11 மாநில சிறைகளில் சாதிய ரீதியான அணுகுமுறை விதிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தொடர் குற்றசெயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சாதியரீதியில் வகைப்படுத்தக்கூடாது எனவும் இதுதொடர்பான நடவடிக்கை பதிவுகள் சட்டவிரோதமானவை என்பதால் அதனை ஒழிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியல் சாசனத்திற்கு முரணாக பல்வேறு மாநிலங்களில் சிறை விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாகவும், சிறை விதிகளில் மாற்றம் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனைக் குறைப்பு, சிறைகளை சுத்தம் செய்வது, சமையல் செய்வது ஆகிய பணிகளில் சாதியப் பாகுபாடு காட்டக் கூடாது என பட்டியலின விளிம்புநிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து... அந்த அரசியல் புள்ளி தான் காரணமா..? பதறிய டோலிவுட்!
அதனையும் மீறி சிறைகளில் சாதியப் பாகுபாடு காண்பிக்கப்பட்டால், மாநில அரசுகளே பொறுப்பு எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
What's Your Reaction?