காலையிலேயே ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் 7 நாள் கொட்டப்போகும் மழை..சென்னையில் எப்படி?

இன்று முதல் ஜூலை 24 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Jul 21, 2024 - 07:33
 0
காலையிலேயே ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் 7 நாள் கொட்டப்போகும் மழை..சென்னையில் எப்படி?
rain in tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. 

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிக கனமழை பெய்து வருவதால் கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையிலும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி , நுகு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிகஅளவில் நீர் திறந்து விடப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி  ஒகேனக்கலுக்கு 54 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிப்பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் தொடர்ந்து 6வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 26ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ''மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 26ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று முதல் ஜூலை 24 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

இன்று முதல் ஜூலை 23 வரை வடக்கு, மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow