தமிழ்நாடு

15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழக அரசு.. வெளியான அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும்  15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழக அரசு.. வெளியான அதிரடி உத்தரவு
ஜெயராம்-ஆயுஷ் மணி திவாரி

தமிழ்நாடு அரசு காவல்துறையில் முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும்  15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரம் வருமாறு:

1. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆயூஸ் மணி திவாரி, மாநில குற்ற ஆவண காப்பகத்தின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

2. மாநில குற்ற ஆவண காப்பகத்தின் ஏடிஜிபியாக இருந்த ஜெயராம், ஆயுதப்படை பிரிவின் ஏடிஜிபியாக மாற்றம்.

3. காவலர் நலன் பிரிவு உதவி ஐஜியாக இருந்த பாலாஜி ஆவடி காவல் ஆணையர செங்குன்றம்  காவல் துணை ஆணையராக மாற்றம். 

4. செங்குன்றம் துணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன் காவலர் நலன் பிரிவு உதவி ஐஜியாக மாற்றம். 

5.  சேலம் நகர வடக்கு பிரிவு துணை ஆணையராக இருந்த பிருந்தா, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆவடி பிரிவில் காமாண்டன்டாக மாற்றம். இவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்  வன்கொடுமை வழக்கின் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6.  மாநில சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாக இருந்த அசோக் குமார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போச்சம்பள்ளி 7-வது பட்டாலியன் கமாண்டன்டாக மாற்றம். 

7. தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆவடியில் கமாண்டன்டாக இருந்த அய்யா சாமி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13-வது பட்டாலியன் கமாண்டன்டாக மாற்றம். 

8. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13- வது பட்டாலியன் கமாண்டன்டாக இருந்த தீபா சத்யன், திருப்பூர் நகர தெற்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம். 

9.  கோயம்பேடு காவல் துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி, சென்னை காவல்துறை நிர்வாகப்பிரிவு துணை ஆணையராக மாற்றம். 

10.  சென்னை காவல்துறை நிர்வாகப்பிரிவு துணை ஆணையராக இருந்த அதிவீரபாண்டியன், கோயம்பேடு காவல் துணை ஆணையராக மாற்றம். 

11. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7-வது பட்டாலியன் கமாண்டன்டாக இருந்த சங்கு,  ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையராக மாற்றம் 

12. தஞ்சாவூர் ஒரத்தாடு ஏஎஸ்பியாக இருந்த ஷஹானாஸ்ஸிற்கு பதவி உயர்வு வழங்கி மாநில சைபர் கிரைம் பிரிவின் எஸ்பியாக மாற்றம்.

13. காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பியாக இருந்த உதயகுமார் பதவி உயர்வு வழங்கி கோவை தெற்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம். 

14.  ராமநாதபுரம் ஏஎஸ்பியாக இருந்த சிவராமன், சேலம் நகர வடக்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம்.

15. திண்டுக்கல் டவுன் ஏஎஸ்பியாக இருந்த ஷிபின், திருச்ச நகர வடக்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.