சென்னையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர் கனமழையினால் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், சுரங்கப்பாதை பகுதியில் ரயில்கள் ஊர்ந்து செல்கின்றது.
தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், சேலையூர், முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்று பகுதி முழுவதும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கக்கூடிய ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு காற்றுடன் கனமழை பிரியமான வானிலை அறிக்கை தெரிவித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் செங்கல்பட்டு சென்னை புறநகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் பல்லாவரம் பம்மல் அனகாபுத்தூர் பொழிச்சலூர் செம்பாக்கம் சேலையூர் முடிச்சூர் பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்று பகுதி முழுவதும் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் அதிக காற்றுடன் கன மழை பெய்து வருகிறது மழைநீர் ஆனது சாலையில் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் முற்றிலும் சூழ்ந்து கூலம் போல் காட்சி அளிக்கின்றது இதனால் தற்பொழுது வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த சுரங்க பாதையானது கிழக்கு தாம்பரத்திலிருந்து மேற்கு தாம்பரத்தை இணைக்கக்கூடிய முக்கிய சுரங்க பாதை இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி இந்த சுரங்க பாதையை ரயில்கள் கடக்கும்போது ஊர்ந்து சென்று சுரங்க பாதையை கடக்கின்றது.