வயநாடு இடைத்தேர்தல் நிலவரம் - ஏறுமுகத்தில் பிரியங்கா காந்தி! | Kumudam News
வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 2,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யாவும் உள்ளனர்.
விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
சாம்சங் ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி
டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி தனது நன்றிகளைத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நிபந்தனை ஜாமின் கிடைத்தும் சிறையிலிருந்து வெளிவருவதில் சிக்கல் நீடித்திருந்த நிலையில் தற்போது சென்னையை அடுத்த புழல் சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிவந்தார்.
செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Senthil Balaji Bail : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இனிமேல் என்கவுண்டர் கொலைகள் செய்யக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
என்கவுண்டர் தமிழகத்தில் அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு நல்லதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPIM மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
MLA Vanathi Srinivasan About Palani Murugan Maanadu 2024 : பழநி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்ற வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Murugan Maanadu 2024 : தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு, கூட்டணி கட்சிக்குள்ளாகவே வலுத்துள்ள எதிர்ப்பு திமுகவிற்கு குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
எங்கள் கடமையைதான் செய்து வருகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
எங்கள் கடமையைதான் செய்து வருகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.