100 கோடியை கடந்த கங்குவா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கங்குவா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 127.64 வசூலை பெற்றுள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளீயிட்டுள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய அளவில், பிரம்மாண்டமாக உருவான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு எதிர்பார்த்த அளவில் வெற்றியையும், வசூலையும் குவிக்கவில்லை என்றே சொல்லலாம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக ஏமாற்றத்தையே அளித்தது. விஜயின் தி கோட், கமலஹாசனின் இந்தியன் 2, ரஜினியின் வேட்டையன், விக்ரமின் தங்கலான் போன்றவை இதற்கு சான்றுகளாக அமைகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கங்குவா திரைப்படத்திற்கு பெரும்பாலான ரசிகர்கள் முதல் பாதியில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம், க்ளைமேக்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும், எப்போதும் போல நடிகர் சூர்யா தன்னுடைய நடிப்பின் மூலம் கதையை தாங்கி பிடிப்பதாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, திரையரங்குகளில் சத்தம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் புகார் தெரிவித்த நிலையில், தற்போது சத்தத்தை குறைக்க தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தியது.
நெகட்டிவான விமர்சனங்களை பொருட்படுத்தாத நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் திரைப்படத்தை, திரையரங்கில் சென்று நேரில் பார்த்து வருகின்றனர். கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்பதால், போட்டதை எடுக்க முடியாது என்று விமர்சனங்கள் வெளிவந்தது. ஆனால், திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் 127.64 வசூலை குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, கார்த்தி, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், நட்டி நட்ராஜ், வசுந்தரா, போஸ் வெங்கட் மற்றும் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
நடிகை ஜோதிகா கங்குவா திரைப்படத்தின் மீது திட்டமிட்டு சிலர் எதிர்மறையான விமர்சங்களை வைத்துள்ளனர் என்று நடிகை ஜோதிகா குறிப்பிட்டு இருந்தார்.
What's Your Reaction?